வியாழன், 8 ஆகஸ்ட், 2024

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன்

May be an image of 2 people and text
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன்!     தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.
May be an image of 2 people and text

அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை கூடி தமிழ் பொது வேட்பாளரை அறிவித்துள்ளனர்.
அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களும் இறுதிப் பட்டியலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.-  மலையோர செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக