வியாழன், 8 ஆகஸ்ட், 2024

முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு மரண தண்டனை

தினகரன் : – மனுக்களை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்
– மாணவர் ஒருவரை கடத்திய சம்பவத்திற்கு 4 வருட சிறை
முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உயர்நீதிமன்றம் இன்று (08) உறுதி செய்துள்ளது.
2013 ஆம் ஆண்டு வர்த்தகர் மொஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் 4 பொலிஸ் அதிகாரிகள் என ஆறு பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனையை விதித்திருந்தது.



இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளதுடன் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.

இதேவேளை, மற்றுமொரு வழக்கில் 2009ஆம் ஆண்டு மாலபை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை கடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாஸ் குணவர்தன, அவரது மகன் மற்றும் மேலும 3 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக