வியாழன், 20 ஜூன், 2024

பாடறியேன் படிப்பறியேன் ... பஞ்ச பரம்பரைக்கு அப்புறமா? பஞ்ச பரம்பரை கற்பரமா?

ராதா மனோகர் :  :  பாடறியேன் படிப்பறியேன் ... பஞ்ச பரம்பரைக்கு அப்புறமா? பஞ்ச பரம்பரை கற்பரமா?
சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன் என்ற பாடலின் வரிகளை திட்டமிட்டு திரிபு படுத்தும் முயற்சியை பல பார்ப்பன ஊடகங்கள் அல்லது எழுத்தாளர்கள் முயன்று வருகிறார்கள்!
அந்த பாடலில் உள்ள ஒரு வரி பார்பனர்களை பாடாய் படுத்துகிறது! அந்த வரிகள் :
சஜ்ஜூவம் என்பதும் தைவதம் என்பதும் பஞ்ச பரம்பரை கற்பரம்தான்!
இந்த வரிகள் சாஸ்திரிக சங்கீதம் என்று பார்ப்பனர்களால் உயர்த்தி பிடிக்கப்பட்டு வரும் இசையானது உண்மையில் மண்ணின் மைந்தர்களின் கண்டு பிடிப்பு என்பதை ஒரு வரலாற்று சாசனமாக எழுதிவிட்டார் கவிஞர் வைரமுத்து!
அது மட்டுமல்ல அந்த வரிகளுக்கு வலு சேர்க்கும் வரிகளாக மீண்டும் அழுத்தமாக
அம்மி அரைச்சவ கும்மி அடிச்சவ நாட்டுபுறத்தில சொன்னதப்பா! என்றும் பாடி விட்டார் வைரமுத்து!
அதை எந்த காலத்திலும் அழியாத அற்புத இசையில் இளையராஜாவும் அரங்கேற்றி விட்டார்!
கல்லில் எழுதியதை கூட அழித்துவிடலாம். ஆனால் காற்றிலும் வெளியிலும் மக்களின் மனதிலும் அல்லவா இருவரும் சேர்ந்து எழுதி விட்டார்கள்!
இதை எப்படி  அந்த சிலரால்  தாங்கி கொள்ள முடியும்?
ஆண்டாண்டு காலா காலமாக சங்கீதத்தின் பிதாமகர்கள் தாங்கள்தான் என்று உலகை நம்ப வைத்த பொய்யர்களுக்கு இது மிகப்பெரும் சவால்,
எந்த சவாலையும் நேர்மையாக எதிர்கொள்ளும் ஆற்றல் அற்றவர்கள், .
 வாதிட்டு வெல்ல முடியாதவர்களை தீயிட்டு கொழுத்தியவர்கள்  அல்லவா?

சஜ்ஜுவம் என்பதும் தைவதம் என்பதும் பஞ்ச பரம்பரை கற்பரம் என்பதை அப்படியே மாற்றி
பஞ்சப்பரம்பரைக்கு அப்புறம் என்று எழுத தொடங்கி விட்டார்கள் .
மறந்து போயும் அந்த வரிகளை பஞ்ச பரம்பரை கற்பரம் என்று எழுதுவதை தவிர்க்கிறார்கள்

இந்த பாடல் ஒரு நாட்டு பாடலாகும் .இதில் மரி மரி நின்னே என்ற தெலுங்கு பாடல் காம்போதியில் அமைத்து இருந்தது . .ஆனால் இதை அப்படியே சாருமதி ராகத்தில் மாற்றி அமைத்து இளையராஜா சும்மா புகுந்து விளையாடி உள்ளார்
இந்த பாடலுக்கும் எனக்கும் கூட ஒரு தொடர்பு இருக்கிறது .. இந்த பாடலை முதல் கேட்ட பொழுதே சுமார் இருபது தடவைக்கு மேல் கேட்டுவிட்டு .இந்த பாடலுக்கு நிச்சயம் குடியரசு விருது கிடைக்கும் என்று சகோதரரிடம்  கூறினேன் . அப்படியே இதற்கு தேசிய விருதும் கிடைத்தது அதன் பின் இந்த பாடல் என்னை ஒரு பைத்தியம் ஆக்கியது .
அதன் காரணமாக வாய்பாட்டு கற்கவேண்டும் என்ற வேட்கை உண்டானது .. ஆம் நானும் கொஞ்சம் கற்றேன் ..சுமார் மூன்று வருடங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக