வெள்ளி, 21 ஜூன், 2024

உத்தர பிரதேசம் தூங்கிக் கொண்டிருந்த வாலிபருக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை! உபி டாக்டர்களின் கொடூரம்

 UP Man's Genitals Removed, Sex-Change Surgery Done While He Was Sleeping
Samiran Mishra link:   UP -mans-genitals-removed

 மாலை மலர் :  உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு வாலிபரின் கட்டாயத்தின் பேரில் அவருடன் சேர்ந்து டாக்டர்கள் மற்றொரு வாலிபரின் பிறப்புறுப்பை நீக்கி பெண்ணாக மாற்றிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.
பாரதிய கிஷான் யூனியன் (BKU) இந்த சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்தியபோது இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மன்சூர்பூரில் உள்ள பெக்ராஜ்பூர் மருத்துவ கல்லூரில் இந்த சம்பவம் முஜாஹித் (வயது 20) வயது வாலிபருக்கு நடந்துள்ளது.
இதெல்லாம் தனக்கு ஓம் பிரகாஷ் என்பரால் நடைபெற்றதாக முஜாஹித் தெரிவித்துள்ளார். முஜாஹித்திற்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி வலுக்கட்டாயமாக மருத்துவக் கல்லூரியில் ஓம்பிரகாஷ் சேர்த்துள்ளார்.



அங்குள்ள மருத்துவர்களிடம் முஜாஹித்தின் பிறப்புறுப்பை நீக்கி, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் மருத்துவவர்கள் முதலில் மறுத்துள்ளனர். பின்னர் ஓம் பிரகாஷ் எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டார்.

முஜாஹித் மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது ஓம் பிகராஷ் ஆபரேசன் தியேட்டரில்தான் இருந்துள்ளார்.

இது தொடர்பாக முஜாஹித் கூறியதாவது:-

ஓம் பிரகாஷ் இங்கே என்னை அழைத்து வந்தார். அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. நான் மயக்கம் தெளிந்து பார்க்கும்போது, நான் பெண்ணாக மாற்றப்பட்டுள்ளேன் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

பெண்ணாக மாறியதால் தற்போது என்னுடன் வசிக்க வேண்டும் ஓம் பிரகாஷ் தெரிவித்தார். இனிமேல் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் யாரும் உன்னை ஏற்றுக் கொள்ளமாட்டார். தனது தந்தையை சுட்டுக் கொள்வேன். குடும்ப நிலத்தின் என்னுடைய பங்கை பெறுவேன் என ஓம் பிரகாஷ் மிரட்டினார்.

நான் உன்னை பெண்ணாக மாற்றியுள்ளேன். தற்போது நீ என்னும் வாழ வேண்டும். நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொள்ள வழக்கறிஞரை ஏற்பாடு செய்து விட்டேன். உன்னுடைய நிலத்தை விற்று லக்னோ சென்று விடுவேன் எனக் கூறினார்.

இவ்வாறு முஜாஹித் தெரிவித்துள்ளார்.

விவசாய தலைவர் ஷியாம் பால் தலைமையில் BKU தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓம் பிரகாஷ் மற்றும் இதில் தொடர்புடைய டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே போலீசார் ஓம்பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக