வியாழன், 9 மே, 2024

சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 மாலை மலர் : இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக இந்திய மக்களின் நிறங்களை குறிப்பிட்டு சபாம் பிட்ரோடா பேசினார்.
இதனால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. சாம் பிட்ரோடாவிற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பிரதமர் மோடி நிறவெறி என கடுமையாக சாடினார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார்.
சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்.



கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்" எனக் கூறியிருந்தார்.

"தென் இந்தியர்களை ஆப்ரிக்கர் என்கிறார் சாம் பிட்ரோடா. தென் இந்தியர்களை நிறத்தை வைத்து காங்கிரஸ் விமர்சிக்கிறது. சாம்பிட்ரோடா, காங்கிரஸ் இளவரசரின் ஆலோசகராகவும், நண்பராகவும் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3வது நடுவராகவும் உள்ளார்.
பிட்ரோடாவின் கருத்துகள் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த இனவெறி கருத்து குறித்து காங்கிரஸ் இளவரசர் பதிலளிக்க வேண்டும். நாட்டு மக்களை நிறம் மூலமாக அவமதிப்பதை நாடு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. மோடி பொறுத்துக் கொள்ளமாட்டார்" என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக