வியாழன், 9 மே, 2024

அழகிரியின் மகன் துரை தயாநிதியை நலம் விசாரித்த முதல்வர்

 nakkheeran.in  : அழகிரியின் மகன் துரை தயாநிதியை நலம் விசாரித்த முதல்வர்
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரியுடைய மகன் துரை தயாநிதியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 உயர்ரக சிகிச்சை அளிக்கக்கூடிய வார்டில் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார்.
துரை தயாநிதிக்கென்று மருத்துவக் குழு ஒதுக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரை 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.



இந்நிலையில் துரை தயாநிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவிடமும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

முதலமைச்சரின் வேலூர் வருகையையொட்டி வேலூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஆகிய இடங்களில் வேலூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக முதலமைச்சர் வருகையையொட்டி வேலூர் சிஎம்சி மருத்துவமனை முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களால் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு முழுமையாக சோதனை செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக