புதன், 8 மே, 2024

கஞ்சா வழக்கு.. சவுக்கு சங்கர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!

 tamil.oneindia.com - Shyamsundar I சென்னை: கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மீதான விசாரணை நடைபெறுகிறது.
தேனியில் கைது செய்யப்பட்ட போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. சவுக்கு சங்கருக்கு கஞ்சா வழங்கியதாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மகேந்திரன் என்ற இளைஞர் கைது, அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று விசாரிக்கப்படுகிறார்.



வழக்கு: சமீபத்தில் சவுக்கு சங்கர் யுடியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்தபோது, காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதையடுத்து சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

புகார்: இந்த நிலையில் சவுக்கு சங்கரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயிலில் பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து அடித்துள்ளதாகவும் கோவை சிறையில் சவுக்கு சங்கரை சந்தித்த பின் அவரது வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கை உடைந்து விடக்கூடாது என பிளாஸ்டிக் பைப்பில் துணி சுற்றி அடித்துள்ளனர். ஆனாலும், அடி பலமாக விழுந்ததால் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வீக்கத்தை குறைப்பதற்காக ஆயின்மெண்ட் போட்டு, வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத்துள்ளனர். வலி நிவாரணி அதிகம் கொடுத்ததால் அவரது கிட்னி பாதிக்கப்பட உள்ளது.


சவுக்கு சங்கர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் 10க்கும் மேற்பட்ட சிறை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது கண்களை கட்டிவிட்டு, குச்சியில் துணி சுற்றி காவலர்கள் அவரை தாக்கியதாக சவுக்கு சங்கர் என்னிடம் கூறினார்., என்று சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இன்னொரு வழக்கு: இந்நிலையில் தான் மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் புகாரில் சென்னை மாநகர குற்ற பிரிவில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்டிடிவி பிராஃபிட் தொலைக்காட்சியின் நியூஸ் எடிட்டராக இருப்பவர் சந்தியா ரவிசங்கர். இவர் சென்னை மாநகர குற்ற பிரிவில் புகார் அளித்தார். அதில் பெண் பத்திரிகையாளர் குறித்து கோலமாவு சந்தியா என்ற பெயரில் இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை சவுக்கு சங்கர் தனது இணைய‌ பக்கத்தில் வெளியிட்டதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி 294 பி (ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துதல்), 354டி (அனுமதியின்றி பின்தொடர்தல்), 506(1) (குற்றவியல் மிரட்டல்), 509 (பெண்ணை தவறான நோக்கத்தில் அவமதித்தல்) மற்றும் தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச் சட்டம் பிரிவு 4 உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக