செவ்வாய், 16 ஏப்ரல், 2024

இசையமைப்பாளர்களுக்கு காப்புரிமை கிடையாது! அவை தயாரிப்பாளர்களுக்கு உரியவை!

No photo description available.
Sunil Dutt r Nalini Jaywant  Radio Ceylon
Golden Music Directors In Tamil 50s 60s 70s

ராதா மனோகர் :  இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை  கோருவது சரியா?
அவை பாடல்களின் தயாரிப்பாளர்களுக்கு உரியவை அல்லவா?
இசையமைப்பாளர்கள் இசையமைப்பதற்கு பணம் வாங்கும் பொழுது அவர்களின் பாடலுக்கு உரிய உரிமையை தயாரிப்பாளர்களுக்கு விற்றுவிட்டார்கள.
அதன் பின் பாடலின் சகல உரிமையையும் தயாரிப்பாளர்களுக்கே உரியது.Who're The New Generation Music Directors In The Tamil Film, 41% OFF
இதில் சட்ட சிக்கல் ஏதுமில்லை
ஆனால் நடைமுறை சிக்கல்கள் கொஞ்சம் உண்டு.
இந்தியாவில் பாடல்களின் காப்புரிமை பற்றி மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி பேசுகிறார்கள்.
இது ஏன் என்று சிந்தித்து பார்க்கும்போது இதற்கு ஒரு பின்னணி இருப்பது தெரிகிறது.

 இந்திய ஒன்றிய அரசின் செய்தி ஒலிபரப்பு ராஜாங்க அமைச்சராக இருந்த மெத்த படித்த பி வே கேஸ்கார் B. V. Keskar என்பவர் கடும் பிற்போக்குவாதி.
இவரின் காலத்தில் சினிமா பாடல்கள் மிகவும் தரம் குறைந்த இசை என்பதாகவும்  அந்த இசை ஆகாஷிவாணியில் ஒலிக்க கூடாது என்று தடைசெய்திருந்தார்.


மறு புறத்தில் தமிழ் பாடல்களை மட்டுமல்லாது ஹிந்தி மலையாள தெலுங்கு பாடல்களையும் இலங்கை வானொலி ஒலிப்பரப்பியது  
இலங்கை வானொலியானது அப்பாடல்களுக்கு உரிய காப்புரிமை பணம் செலுத்தாமல் ஒலிப்பரப்பி கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் அவ்வப்போது பொதுவெளியில் எழுந்தன.

 பட தயாரிப்பாளர்களே தங்கள் படப்பாடல்களை இலங்கை வானொலி அடிக்கடி ஒலிப்பரப்பு செய்யவேண்டும் என்று இலங்கை வானொலியை சேர்ந்தவர்களை வேண்டி கொண்டிருந்தனர்
திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் வேலையை இலங்கை வானொலி செய்து கொண்டிருந்தது.
தங்கள் பாடல்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாவதை  திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு வரமாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர்
இதன் காரணமாகவே இலங்கை வானொலி ஒலிப்பரப்பாளர்  திரு மயில்வாகனம் அவர்கள் எம்ஜியார் சிவாஜி ஏவி மெய்யப்ப  செட்டியார்  எஸ் எஸ் வாசன் போன்றவர்களின்  குடும்ப நண்பராகவே கருதப்பட்டார்
 

இலங்கை வானொலியின் காப்புரிமை அற்ற ஒலிப்பரப்பை அன்று தடுக்காமல் விட்டதன் தொடர்ச்சிதான்  இன்று பாடல்களின் காப்புரிமை பற்றிய விளக்கமின்மைக்கு காரணம் என்று நான் எண்ணுகிறேன்
    
இசையமைப்பாளர்கள் தங்கள் இசையமைப்பை படத்தயாரிப்பின் போதே தயாரிப்பாளர்களுக்கு விற்றுவிடுகிறார்கள்.
இளையராஜா காப்புரிமை தனக்கே வேண்டும் என்று கேட்பது வேடிக்கையானது
என்ன செய்வது வாடகைக்கு எடுத்த பிரசாத் ஸ்டூடியோவின் பகுதியை தனக்கே சொந்தம் என்று அடம்பிடித்த வரலாறு அவருடையது .
அற்புத இசைஞானியின்  ..  குணம் .. .
சட்டம் தன் கடமையை செய்யட்டும்
 

B. V. Keskar பி வே கேஸ்கர் நேருவின் அமைச்சரவையில் செய்தி ஒலிபரப்பு ராஜாங்க அமைச்சராக இருந்தவர் . வாரணாசி சம்ஸ்கிருத வித்தியா பீடத்தில் விரிவுரையாளராக இருந்தவர் . அந்த சம்ஸ்கிருத பார்ப்பனீய கோட்பாடுகளை அமைச்சராக இருந்த போது அமுல் படுத்தியவராகும்.
இந்திய வானொலியில் சினிமா பாடல்களையும் கிரிக்கெட் நேரடி வர்ணனைகளையும் மட்டுமல்ல ஹார்மோனிய வாத்தியத்தை கூட அனுமதிக்காமல் இருந்தவர் . அவையெல்லாம் இவரது அகராதியில் தீட்டு.
இவர் சுமார் பத்து வருடங்கள் அந்த அமைச்சராக இருந்தவர்.
இந்த புண்ணியவானின் சினிமா பாடல்கள் மீதான தீட்டு இலங்கை ஒலிபரப்பு துறைக்கு ஒரு பெரும் நல்வாய்ப்பாக அமைந்தது.
தமிழ் சிங்களம் மட்டுமல்லாது ஹிந்தியிலும் இலங்கை வானொலி ஒலிபரப்பு வர்த்தக சேவை கொடி கட்டி பறந்தது.
சில ஹிந்தி மொழி வல்லுநர்களை வைத்தது இச்சேவையை இலங்கை மேற்கொண்டது.
ஹிந்தி மொழி அறிவிப்பாளராக பழம் பெரும் ஹிந்தி நடிகர் சுனில் தத் கூட சில காலம் இங்கு பணியாற்றினார் என்று தெரிகிறது
காஞ்சிவர் சகோதரிகள் விமலா, காமினி . விஜய் கிஷோர் துபே கோபால்.சர்மா. ஹசன் ரஸ்வி குமார்.மனோகர் மகாஜன் சுனில் தத் போன்ற ஹிந்தி பிரபலங்கள் பணியாற்றினர் குறிப்பாக பினாக கீத் மாலா Binaka Geet Mala என்ற ஹிந்தி பாடல் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது.
Sunil Dutt ( right ) listening to Hindi film star Nalini Jaywant speaking Radio Ceylon
இலங்கை வானொலி வர்த்தக சேவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக