செவ்வாய், 16 ஏப்ரல், 2024

ராகுல் காந்தி : இதெல்லாம் ஸ்டார்ட்டர் தான், 2047-ல தான் மெயின் கோர்ஸ்!

மாலை மலர் :  பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர சமூக வலைதளங்களிலும் புகைப்படம், வீடியோ, மீம்ஸ் என வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வரிசையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஆளும் கட்சி மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களையும், பா.ஜ.க. சார்பில் காங்கிரஸ் மற்றும் எதிரக்கட்சியினருக்கு எதிரான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அப்படியாக ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பான பதிவில், "சாதனை படைக்கும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், கடன் சுமை மற்றும் அரசு அடக்குமுறையால் உயிரிழக்கும் விவசாயிகள், உதவியின்றி தவிக்கும் தொழிலாளர்கள், துன்புறுத்தப்படும் வியாபாரிகள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றிலேயே பலவீனமாகி உள்ளது. உலகின் மிகப் பெரிய ஊழல் தேர்தல் பத்திரங்கள்."

"நாம் பசியை தூண்டும் உணவை சுவைத்து விட்டோம், 2047 ஆம் ஆண்டு விருந்து சாப்பிட போகிறோம் என்று பிரதமர் மோடி மக்களிடம் கூறி வருகிறார்," என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக