திங்கள், 15 ஏப்ரல், 2024

திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி! ஏபிபி - சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள்

 tamil.samayam.com - மரிய தங்கராஜ்  ; மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி இறைத்து மக்களின் பார்வையை தங்கள் பக்கம் திருப்ப பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.
ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்குகிறது. தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழக மக்கள் யாருக்கு பெருவாரியான ஆதரவை வழங்க உள்ளனர் என்பது குறித்த ஆவல் அதிகரித்து வருகிறது.
திமுக கூட்டணி கடந்த முறை பெற்ற மிகப்பெரிய வெற்றியை இந்த முறையும் தொடர வேண்டும் என்று முயற்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிக தொண்டர் படை உள்ள கட்சி என்று கூறப்படும் அதிமுகவும் தங்கள் பலத்தை நிரூபிக்க பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி தனி அணி அமைத்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது

.
அடுத்த 5 நாட்கள்.. உக்கிரமாக மாறும் சூரிய பகவான்.. வெளிேய வந்துராதீங்க
திமுக, அதிமுக அல்லாத தனி அணியை அமைத்துள்ளது பாஜக. தமிழ்நாட்டில் கால் ஊண்ற வேண்டும் என்று நீண்ட காலமாக இயங்கிவரும் பாஜக இந்த தேர்தலை அதற்காக பயன்படுத்துகிறது.

நாம் தமிழர் கட்சியும் வழக்கம் போல் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கி தனித்து களம் காண்கிறது.

இந்த சூழலில் தமிழ்நாட்டு மக்கள் யாருக்கு தங்கள் ஆதரவை அதிகளவில் தரப் போகிறார்கள் என்பது குறித்து ஏபிபி - சி வோட்டர் நிறுவனங்கள் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளன. அந்த முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தென் சென்னை தேர்தல் களம் யாருக்கு சாதகம்?
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக, பாஜக அணிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திமுக 21, காங்கிரஸ் 9, விசிக 2, மதிமுக 1, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் 2, கொமதேக 1, இயூமுலீ 1 என்ற வகையில் கட்சிகள் போட்டியிடுகின்றன். இதில் கொமதேக திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

மகளிர் உரிமைத் தொகை: விரிவுபடுத்தப்படும் பட்டியல் - கோட்டையில் இருந்து வந்த க்ரீன் சிக்னல்!
திமுக கூட்டணி கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களில் வென்றது. இந்த முறை 39 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்களவையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக 3ஆவது இடத்தை இந்த முறையும் திமுக பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரிய தங்கராஜ் கட்டுரையாளரை பற்றி
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக