சனி, 6 ஜனவரி, 2024

தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீடு செய்கிறது வின்ஃபாஸ்ட்

 மாலை மலர் :  வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாக வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் ரூ.16000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை கையெழுத்தாகிறது.
தூத்துக்குடியில் அமையவுள்ள இந்த தொழிற்சாலையின் மூலம் தமிழ்நாட்டில் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை"- உச்சநீதிமன்றம் தீர்ப்பு !

கலைஞர் செய்திகள்  - Praveen :  தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
 அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது.
இதனிடையே ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், மூன்றாம் நீதிபதி ஜாமீனுக்கு மறுப்பு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், அதனை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுப்பு தெரிவித்தார்.

வெள்ளி, 5 ஜனவரி, 2024

சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்: களமிறங்கியது இந்திய கடற்படை

மாலை மலர் :  மொகடிஷு ஆப்பிரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் வணிக கப்பல் (எம்.வி. லிலா நார்போல்க்) கடத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.
இது குறித்து தகவலறிந்த இந்திய கடற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கப்பலில் லைபீரியாவின் கொடி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை, கடத்தப்பட்ட கப்பலை நோக்கி நிலைமையை சமாளிக்க நகர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

குட்டி சீனாவாக மாறும் தமிழ்நாடு.. இனி நாமதான் கிங் மேக்கர்..!!

குட்டி சீனாவாக மாறும் தமிழ்நாடு.. இனி நாமதான் கிங் மேக்கர்..!!

tamil.goodreturns.in  - Prasanna Venkatesh :  தமிழ்நாடு பல துறையில் முன்னோடியாக இருந்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவும் வியந்து பார்க்கும் ஒரு துறை என்றால் காலணி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி துறை தான். இந்தியாவின் மொத்த தோல் மற்றும் தோல் அல்லாத காலணி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 48 சதவீத பங்கீட்டை வகிக்கிறது. இதேபோல் இந்தியாவின் மொத்த காலணி தயாரிப்பில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 32 சதவீதம்.
இந்தச் சூழ்நிலையில் இத்துறைக்கான அடுத்தகட்ட வளர்ச்சி என்ன? எனத் திட்டமிட்ட போது தான் உலகம் முழுவதும் சீனா+1 கொள்கை காட்டுத்தீபோல் பரவிவந்தது.
இதில் குளிர்காயத் திட்டமிட்ட தமிழ்நாடு அரசு வெளிநாட்டுக் காலணி தயாரிப்பு நிறுவனங்களுக்கான கதவுகளைத் திறந்தது.
தமிழ்நாடு அரசு தோல் அல்லாது காலணி தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க முடிவு செய்தது. இதில் முதல் வெற்றி

இலங்கையில் மதபோதனை கூடத்தில் 7 பேர் தற்கொலை

 hirunews.lk :  மதபோதனையில் பங்கேற்ற 7 பேர் உயிர் மாய்ப்பு - வெளியான முக்கிய செய்தி!
மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட 6 பேர் தங்களது உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய, உயிரிழந்த   மதப் போதகரான பிரசன்ன குணரத்ன என்பவரின் பிள்ளைகள் இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக பாடசாலைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த குறித்த மதப் போதகர் நாட்டின் பல பகுதிகளில் நடத்திய போதனை செயற்பாடுகளுக்காக அவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தமையால் பாடசாலைக்கு செல்லவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரும் அவர் நடத்திய மதப் போதனை நிகழ்வில் பங்கேற்ற 6 பேரும் இதுவரையில் தங்களது உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி Y.S ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மின்னம்பலம் - Selvam :  காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி தலைவருமான ஷர்மிளா இன்று (ஜனவரி 4)  காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை ஷர்மிளா நிறுவினார். கடந்த ஒரு வருடமாக ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

ரகசியம் மறைத்த உதயநிதி! ராகுல் காந்தி சந்திப்பில் என்ன நடந்தது? திடீர் மீட்டிங்கின் பின்னணி விளக்கம்

tamil.oneindia.com -  Nantha Kumar R : டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தி உடனான இன்றைய சந்திப்பில் என்ன நடந்தது? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியான நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
இருப்பினும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம் பற்றிய ரகசியத்தை அவர் கூற மறுத்துவிட்டார்.
தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு இந்த போட்டியை தமிழகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கோடநாடு விவகாரத்தில் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக எடப்பாடி மான நஷ்ட வழக்கு
இந்த விளையாட்டு போட்டிக்கு வரும்படி பிரதமர் மோடியை அழைக்க உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றார்.
இன்று மாலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துவக்க விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

அதானி - ஹிண்டன்பர்க் : செபிக்கு உச்ச நீதிமன்றம் 3 மாதங்கள் கெடு

BBC News தமிழ் :  அதானி vs ஹிண்டன்பர்க் : செபிக்கு உச்ச நீதிமன்றம் 3 மாதங்கள் கெடு
ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டின் அடிப்படையில் அதானி குழுமத்திற்கு எதிராக நடக்கும் விசாரணையை வேறு நிறுவனத்திற்கு மாற்றக்கோரிய வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை, ஜனவரி 3) தீர்ப்பளித்துள்ளது.
இதில் அதானி குழுமத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் தொகுப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.
இந்த மனுக்கள் ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவைக் கோரியிருந்தன.

ஈரானில் குண்டுவெடிப்பு- 70க்கும்அதிகமானவர்கள் பலி 171 பேர் காயம்

தினமணி : இரானின் புரட்சிகரப் படைகளின் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில், அவரது கல்லறை அருகே நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறுகிறது.
ஊடகம் சார்பாக வெளியான காணொளியில், தெற்கு நகரமான கெர்மனில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகே நடந்த ஊர்வலத்தில் குண்டுகள் வெடித்துள்ளன எனவும், இந்த தாக்குதலில் 171 பேர் காயமடைந்ததாகவும் அரசு செய்தி தொடர்பாளர் இரிப் கூறினார்.

புதன், 3 ஜனவரி, 2024

பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு - சொத்துக்குவிப்பு வழக்கில்

 மின்னம்பலம் - Kavi : சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி இன்று (ஜனவரி 3) மேல்முறையீடு செய்துள்ளார். Ponmudi appeals in Supreme Court
கடந்த 2006 – 2011 திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக  பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.76 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என்று கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

 மாலை மலர் :  தமிழ்நாடு     கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.
    இந்த மனு காலாவதி ஆகிவிட்டதாக அறிவிப்பு.
கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கில்," பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு" தெரிவித்திருந்தார்.
மேலும், "அப்போது, ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவை எதிர்த்த இந்த மனு காலாவதி ஆகிவிட்டதாக" தெரிவித்த நீதிபதி, சண்முகத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

செவ்வாய், 2 ஜனவரி, 2024

மோடி நிகழ்வில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தடை? திருச்சி சூர்யா இருந்தாரே.. கோர்த்துவிடும் காயத்ரி!

Tamil Nadu BJP leader Annamalai not allow to PM Modi Function?

tamil.oneindia.com - Mathivanan Maran :  சென்னை: பிரதமர் மோடியை வரவேற்பதற்கும் திருச்சி விழாவில் பங்கேற்பதற்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அனுமதிக்கப் படவில்லையா என முன்னாள் பாஜக நிர்வாகி நடிகை காயத்ரி ரகுராம் சுட்டிக்காட்டி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிரதமர் மோடி வருகையின் போது திருச்சி மாநகரம் தூய்மையாக இருக்க வேண்டும் ; ஒரு இடத்தில் கூட குப்பையே இருக்கக் கூடாது என தொண்டர்களுடன் களமிறங்கி இன்று காலை அதீதமாக தூய்மைப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

ஸ்ரீ வித்தியா : நான் கமலை பிரிவதற்கு இதுதான் காரணம்.. மறைவுக்கு முன் மனம் திறந்து பேசிய...

 Cinemapettai - Mirudhula :  : சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நடிகர் கமலஹாசன், மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவை நேரில் சென்று பார்த்தது தென்னிந்திய மீடியாக்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
ஒரு நடிகனாக, தன்னுடன் நடித்த சக நடிகை நோய் வாய் பட்டு இருக்கும் பொழுது நேரில் சந்தித்ததில் என்ன இருக்கிறது என தோணலாம். இந்த இருவருக்கும் பின்னால் மிகப்பெரிய லைலா மஜ்னு காதல் கதையே இருக்கிறது.
கமல் மற்றும் ஸ்ரீவித்யா அப்போதைய காலகட்டத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள்.
அதில் முக்கியமாக சொல்ல வேண்டிய படம் அபூர்வராகங்கள். திரையில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது போல் இருவருக்கும் நிஜ வாழ்க்கையிலும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது.
இத்தனைக்கும் ஸ்ரீவித்யா கமலஹாசனை விட இரண்டு வயது மூத்தவர் என சொல்லப்படுகிறது.

நெல்லை: 3 மாதங்களில் 50 சாதிய கொலைகளா? சமூக ஊடகங்கள் தூண்டுகோலாவது எப்படி

நெல்லையில் சாதிய படுகொலை

BBC News தமிழ் , தங்கதுரை குமாரபாண்டியன் :  தூத்துக்குடி புளியங்குளத்தைச் சேர்ந்த முத்துபெருமாள் என்ற இளைஞர் நேற்று (டிச. 31) தனது இருசக்கர வாகனத்தில் நெல்லை நோக்கி சென்றபோது வழிமறித்த மூன்று இளைஞர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றனர்.
கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்ததில் சாதியக் கொலை என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் மாயமான நபரை தேடி வருகின்றனர்.
நெல்லையில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் வன்முறைக்கான காரணங்கள் என்ன?

திங்கள், 1 ஜனவரி, 2024

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பாஜக நிர்வாகிகள்.. சிக்கியும் 2 மாதங்களுக்கு பிறகே கைது!

 tamil.oneindia.com -  Vignesh Selvaraj ; லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்கலைக்கழக மாணவியைக் கடத்தி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜகவைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 1ஆம் தேதி வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனது நண்பருடன் அங்குள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்று விட்டு திரும்பியுள்ளார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தின் அருகில் வரும்போது மூன்று பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து மாணவனை கடுமையாக தாக்கி விட்டு துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.

ஜப்பானில் நிலநடுக்கம், 16 அடி உயரம் எழுந்த சுனாமி - என்ன நடக்கிறது?

BBC News தமிழ் :  ஜப்பானைத் தொடர்ந்து தென் கொரியாவையும் தாக்கிய சுனாமி அலைகள் - என்ன நடக்கிறது?
நோட்டோ உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை முன்னதாக விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை ‘சுனாமி எச்சரிக்கை’ என ஜப்பான் அரசு தளர்த்தியுள்ளது.
நீகாட்டா மற்றும் டோயாமா போன்ற நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இஷிகாவா நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 32,500 வீடுகளில் மின் தடை ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோளிட்டு கியோடோ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குள்ள பல வீடுகள் நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

திமுக கூட்டணியில் பாமக சேர முயற்சி - விசிகவை இழக்க திமுக விரும்பவில்லை?

 Maalaimalar . சென்னை பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் கடைசியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்க ஆரம்பித்துள்ளது.
இந்த தேர்தலில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் அடங்கிய 'இந்தியா கூட்டணி' மற்றொரு அணியாகவும் களம் இறங்குகிறது.
இந்த கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி வைக்க மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாக களம் இறங்குகின்றன.

டாக்டர் கிருஷ்ணசாமி : பாஜக நிர்வாகியை கைது பண்ணுங்க.. தயவு தாட்சண்யமே கூடாது..

 tamil.oneindia.com  - Vignesh Selvaraj :   சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிக்கு அமலாக்கத்துறை சாதி பெயரை குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கொந்தளித்துள்ளார். தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனி வடக்கு காடு என்று அழைக்கப்படக்கூடிய காராமணி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சின்னையன் என்ற சின்னச்சாமி என்பவரது புதல்வர்கள் கண்ணையன், கிருஷ்ணன் ஆவர். காலமான சின்ன சாமி அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட 6 ½ ஏக்கர் நிலத்தில் அவரது புதல்வர்கள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

பிரஷாந்த் கிஷோர் சந்திரபாபு நாயுடு + பவன் கல்யாண் கூட்டணிக்கு வேலை?

May be an image of 1 person, dais and text that says 'The meeting has sparked speculation of Prashant Kishor advising the TDP. f Hyderabad: In an interesting development in Andhra Pradesh politics four months before the Assembly polls, former election campaign strategist Prashant Kishor flew into the state and met Telugu Desam Party President Chandrababu Naidu on Saturday.'

Seshathri Dhanasen :      IPAC,  சுனில் நிறுவனங்களால் வரும் சிக்கல்:
சென்ற ஆந்திரா தேர்தலில் IPAC முழுக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக வேலை பார்த்தது.
ஜெகன் 175 சீட்களில் 151 சீட் ஜெயித்தார்.
அதன் பின்னர் பல்வேறு காண்ட்ராக்ட்கள் IPAC நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன.
தற்போதும் IPAC நிறுவனம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வேலை செய்வதாக தான் சொல்கிறது
ஆனால் தற்போது அதே பிரஷாந்த் கிஷோர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் கூட்டணிக்கு வேலை பார்க்க ஒப்பந்தம் செய்யபட்டு இருக்கிறார்.
கேட்டால் IPAC இல் இருந்து நான் வெளியேறி விட்டேன் என்று சொல்கிறார்.
ஆனால் சந்திரபாபுவிடம் பேசி கொண்டு இருக்கிறார்.
அதிலும் நீங்கள் குப்பத்தில் மட்டும் அல்லாது வேறு ஒரு தொகுதியிலும் நில்லுங்கள் என்று ஆலோசனை கூறி இருக்கிறார்.
பவன் கல்யாண்க்கும் 2 தொகுதியை suggest செய்து இருக்கிறார்.

அமெரிக்காவில் இந்திய குடும்பம் தற்கொலை ரூ.41 கோடி மதிப்புள்ள மாளிகையில் சடலமாக .. அமெரிக்காவில் அதிர்ச்சி !

ரூ.41 கோடி மதிப்புள்ள மாளிகையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய குடும்பம்.. அமெரிக்காவில் அதிர்ச்சி !

கலைஞர் செய்திகள் Praveen :  இந்தியா வம்சாவளி தம்பதியான ராகேஷ் கமல் (வயது 57), டீனா (வயது 54) ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு அரியானா ( வயது18 ) என்ற மகள் இருந்துள்ளார். இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு EduNova என்ற கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிறுவனத்தை தொடங்க இந்த தம்பதியினர் ஏராளமான அளவு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த கல்வி நிறுவனத்தி ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த கல்வி நிறுவனத்தை இந்த தம்பதியினரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள் தப்பிப்பார்களா? ஸ்டாலின் நடத்திய பதட்ட ஆலோசனை!

 மின்னம்பலம் - Aara : வைஃபை ஆன் செய்ததும் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்து செய்தியில்,  இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் குறிப்பிட்ட படியே இனிய மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் நிறையவே நடந்திருக்கின்றன.
ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். டிசம்பர் 21 முதல் உயர் நீதிமன்றத் தீர்ப்பால் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தகுதியிழப்பு நடவடிக்கைக்கு உள்ளாகி உச்சநீதிமன்ற  மேல்முறையீட்டு வழக்கை  எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.  மேலும், திமுகவின் அமைச்சர்கள்  ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு  ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விடுதலையை எதிர்த்து சூமோட்டோவாக எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் சுழற்சி முறையில் மதுரை உயர் நீதிமன்றம் சென்றவர், ஜனவரி 3 முதல் மீண்டும் இந்த வழக்குகளை விசாரிக்க இருக்கிறார்.

குஜராத்தில் போலி சுங்கச்சாவடி, 6 போலி அரசு அலுவலகங்கள் ஆண்டுக்கணக்கில் இயங்கியது எப்படி?

  BBC News தமிழ் -, RAJESH AMBALIYA :  2023ம் ஆண்டில் குஜராத் சந்தித்த ஏராளமான நிகழ்வுகளில், “போலி” என்ற வார்த்தையுடன் தொடர்புடைய ஒரே மாதிரியான சில சம்பவங்கள் இந்தியா முழுவதும் பேசுபொருளாயின.
அது போலி சுங்கச்சாவடியில் தொடங்கி போலி பிரதமர் அலுவலக அதிகாரி வரை, இந்தாண்டில் குஜராத்தில் மட்டும் பல போலி மோசடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இவை குஜராத்தை தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமான சம்பவங்கள் என்பதே இதில் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் குஜராத்தின் மோர்பியிலிருந்து, கட்ச் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 27ல் உள்ள வகாசியா சுங்கச்சாவடியில் ஓராண்டுக்கும் மேலாக இயங்கி வந்த போலி சுங்கச்சாவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

குஜராத்தில் போதைக்கு அடிமையானோர் 19 லட்சம்: வாழ்க குஜராத் மாடல்

மாலைமலர் :இந்தியாவில் போதைப் பொருள் பயன்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தீரஜ் பிரசாத் சாஹு மற்றும் அமீ யாக்னிக் ஆகியோர் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக சர்வேயில் கிடைத்த விவரங்களை அவர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:
சமீப காலமாக குஜராத் மாநிலத்தில் போதைப் பொருள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் அதிகாரிகள் 93,691 கிலோ போதைப் பொருள், 2,229 லிட்டர் திரவ மருந்துகள் மற்றும் 93,763 மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தியாவில் 17,35,000 ஆண்களும், 1,85,000 பெண்களும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்.
குஜராத்தில் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை 27,842.639 கிலோ அபின் அடிப்படையிலான மருந்துகள், 59,365.983 கிலோ கஞ்சா அடிப்படையிலான மருந்துகள், 75.115 கிலோ கோகோயின், 3,789.143 கிலோ சைக்கோட்ரோபிக் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

லதா ரஜனிகாந்த் முக்காட்டுடன் பெங்களூர் நீதிமன்றத்தில் - பிடி வாரண்ட்!

 Maha Laxmi : முக்காடுடன் பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த்.
மோசடி புகாரில் லதா ரஜினிகாந்த்துக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானர் ரஜினி மனைவி லதா.
நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது.
கோச்சடையான் பட தயாரிப்புக்காக, ரூ6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி, லதா ரஜினிகாந்த் ஆஜரான நிலையில், ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது .

இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையம் : கிளாம்பாக்கத்தில் இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கலைஞர் செய்திகள் - Lenin :  தமிழ்நாடு இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையம் : இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.12.2023) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 393.74 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவிலேயே மிகப் பெரிய பேருந்து முனையமான “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” திறந்து வைத்தார். மேலும், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

ரூபாய் - யுவான் - சீன நாணயத்தை ஏற்கும் நாடுகள் இந்திய ரூபாயை நிராகரிப்பது ஏன்? -

இந்திய ரூபாயை உலக நாடுகள் அங்கீகரிக்காதது ஏன்?

BBC News தமிழ் :  இந்தியா தற்போது வரை கச்சா எண்ணெயை அமெரிக்க டாலர்களில் மட்டுமே வாங்கி வருகிறது. ஆனால், முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து இந்திய ரூபாயில் எண்ணெயை வாங்கியுள்ளது.
ரூபாயை உலகளவிலான நாணயமாக மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாகவே முயற்சித்து வரும் இந்தியாவுக்கு இது ஒரு மைல்கல்..
இந்தாண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் போது, இரு நாட்டு நாணயங்களை கொண்டு வணிகம் செய்து கொள்வதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.
அதன் பிறகு, அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனமான Adnoc-மிடமிருந்து 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இந்திய ரூபாயில் வாங்கியுள்ளது இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் .