ஞாயிறு, 31 டிசம்பர், 2023

குஜராத்தில் போதைக்கு அடிமையானோர் 19 லட்சம்: வாழ்க குஜராத் மாடல்

மாலைமலர் :இந்தியாவில் போதைப் பொருள் பயன்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தீரஜ் பிரசாத் சாஹு மற்றும் அமீ யாக்னிக் ஆகியோர் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக சர்வேயில் கிடைத்த விவரங்களை அவர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:
சமீப காலமாக குஜராத் மாநிலத்தில் போதைப் பொருள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் அதிகாரிகள் 93,691 கிலோ போதைப் பொருள், 2,229 லிட்டர் திரவ மருந்துகள் மற்றும் 93,763 மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தியாவில் 17,35,000 ஆண்களும், 1,85,000 பெண்களும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்.
குஜராத்தில் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை 27,842.639 கிலோ அபின் அடிப்படையிலான மருந்துகள், 59,365.983 கிலோ கஞ்சா அடிப்படையிலான மருந்துகள், 75.115 கிலோ கோகோயின், 3,789.143 கிலோ சைக்கோட்ரோபிக் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.2022-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் கைப்பற்றப்பட்ட 71.89 கிலோ கோகைனில் 39.1 கிலோ குஜராத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,36,000 ஆண்கள் கஞ்சா அடிப்படையிலான போதைப் பொருட்களுக்கும், 7,91,000 பேர் அபின் சார்ந்த மருந்துகளுக்கும், 6,59,000 பேர் மயக்க மருந்துகளுக்கும் அடிமையாகியுள்ளனர்.

இதேபோல், பெண்களில் 1,49,000 பேர் கஞ்சா அடிப்படையிலான போதைப்பொருட்களுக்கும், 1,000 பேர் ஓபியாய்டுகளுக்கும், 33,000 பேர் மயக்க மருந்துகளுக்கும் அடிமையாகியுள்ளனர் என தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக