திங்கள், 4 டிசம்பர், 2023

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்விக்கு கமல்நாத்தின் பிடிவாதம் மட்டும் காரணம் அல்ல

May be an image of 1 person and text that says 'JUSTIN செய்திகள் சித்தாந்தப் போர் தொடரும்! "மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் முடிவுகளை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். சித்தாந்தப் போர் தொடரும். தெலங்கானா மக்களுக்கு மிகவும் நன்றி. நாங்கள் கூறிய வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் உழைப்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்." -ராகுல் காந்தி எம்.பி! Kalaignar News R www.kalaignarseithigal.com 03.12.2023'

Kandasamy Mariyappan :  மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்விக்கு கமல்நாத்தின் பிடிவாதமே காரணம் என்று பல அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.!
நான் மாறுபடுகின்றேன்.!
கமல்நாத், அசோக் போன்றவர்கள் RSS/ காங்கிரஸ்வாதிகள்.! அது மட்டுமே நமது கவலை.!
ஆனால்.,
மத்தியபிரதேசத்தில் அகிலேஷ் ஆட்சியமைக்கப் போவதில்லை.!
இன்றைய சூழலில், அங்கே போட்டியிடுவதால் அகிலேஷ் சாதிக்கப் போவது ஏதுமில்லை.!
2024ல் INDIA கூட்டணிக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்குவது எப்படி என்ற சிந்தனையே அகிலேஷுக்கு இருந்திருக்க வேண்டும்.!
அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் உள்ள எல்லையோர மாவட்டங்களில் திமுக போட்டியிட்டால் 10-15% வாக்குகளை பெற முடியும். அதனை வைத்து தமிழ்நாட்டில் உங்களுக்கு பங்கு வேண்டும் என்றால், அந்த மாநிலங்களில் எங்களுக்கு 10 சீட் கொடுங்கள் என்று காங்கிரஸ், கம்யூனிஸ கட்சிகளிடம் பேரம் பேசலாம்.!
அதனால் திமுகவிற்கு எந்த பலனும் இல்லை.!


எனவே, காங்கிரஸ் வழங்கிய இடங்களை பெற்றுக் கொண்டு, அதேவேளையில் உத்திரபிரதேசத்தில் அகிலேஷ் எடுக்கும் முடிவை உறுதிப்படுத்திக் கொண்டு, காங்கிரஸுடன் கூட்டணி வைத்து பணியாற்றியிருக்க வேண்டும்.!
அதுவே அவர் தேசிய தலைவராக உயர்வதற்கு வழி செய்திருக்கும்.!
எது எப்படியோ...
நம்மையே புரிந்துகொள்ள முடியாத நாமால், வடக்கை எப்படி புரிந்துகொள்ள முடியும்.!

மூன்று மாநிலங்களில், காங்கிரஸ் தோல்வி வரவேற்கதக்கதே.!
காங்கிரஸ் கட்சிக்கும் மாநில கட்சிகளை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அறிவு பிறக்கும்.!
அகிலேஷ் போன்ற மாநில கட்சிகளும், காங்கிரஸுடன் எப்படி இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்ற அறிவு பிறக்கும்.!
10 ஆண்டுகாலமாக திமுக பதவியில் இல்லாதது எப்படி,  அந்த தலைவர்களை சித்தாந்தத்தை உள்வாங்கி ஆட்சி நடத்த பழக்கியதோ...
அதே போல் காங்கிரஸ் கட்சியும், இந்த தோல்வி மூலமாக சித்தாந்த எண்ணத்தை உள்வாங்க சரியான படிப்பினையாக இருக்கும் என்றே பார்க்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக