திங்கள், 4 டிசம்பர், 2023

சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடல்- சென்னை புறநகர் அனைத்து ரெயில்களும் நிறுத்தம்

மாலை மலர் :  மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சாலையின் சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழைநீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறைக்கு உள்பட்ட மாநராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் கணேசபுரம், கொங்கு ரெட்டி, பெரம்பூர், வில்லிவாக்க், ரங்கராஜபுரம், அரங்கநாதன், துரைசாமி உள்ளிட்ட 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.15 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதில் 2 இடங்களில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. திருமங்கலம் எஸ்டேட் சாலையில் அதிகளவில் மழைநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.


மாலை மலர் :  மிச்சாங் புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் மெதுவாக ஊர்ந்து சுமார் 6 மணிக்குத்தான் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. தண்டவாளங்களில் வெள்ளம் அதிகமாக சூழ்ந்திருந்ததால் முன்னெச்சரிக்கை காரணமாக மெதுவாக இயக்கப்பட்டது. காற்று மற்றும் மழையின் வேகம் அதிகமாக இருப்பதால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், கும்மிடிப்பூண்டி என அனைத்து மின்சார ரெயில்களும் காலை 8 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மழை மற்றும் சேத விவரங்களை பொறுத்து ரெயில்கள் இயக்குவது குறித்த பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி பகுதிகளில் பிரதான ரெயில்பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக கோவை, பெங்களூர் செல்லக்கூடிய 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக