திங்கள், 4 டிசம்பர், 2023

சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்!

 மாலை மலர் :விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
சரியாக படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பார்கள்.
ஆசிரியர் அடித்தால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சில மாணவர்கள் ஆசிரியரை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொருளாதாரத் துறை ஆசிரியர் கடற்கரை (வயது 12). இவர் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 11-ம் வகுப்பு மாணவர்கள் இருவரை படிக்கும்படி கண்டித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இருவரும் ஆசியரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுவதி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தப்பி ஓடிய மாணவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக