Manoj Kumar : மதிமாறன் என்ற மண்டை வீங்கி ஒன்னு,,தனக்கு மட்டும் மூளை இரட்டிப்பு மடங்குங்கற கற்பனை உலகுல வாழக் கூடிய ஒரு ஜந்து,,
பெரியார் இயக்கத்துக்கே தான் தான் அம்பேத்கரை அறிமுகப்படுத்தியது போலவும்,
அதற்கு முன்னர் எல்லாம் பெரியார் இயக்கங்கள் ஏதோ தலித் விரோதிகளாக இருந்தது போல எல்லாம் பேசிய போதும்,
அவங்க பெரியாரை திட்டுனா,நீங்க பிரபாகரனை திட்டுங்க என லூசுத்தனமாக பரிந்துரைத்த போதும்,
சீமான் சொல்வது போல பெரியார் இயக்கத்தினருக்கு தெலுங்கு பாசம் என கேனத்தனமாக உளறிய போதும்,,,,
இதற்கெல்லாம் எதிர்வினையாற்றிய காரணத்தால் அப்போதிருந்தே என் மீது ஜீரணிக்க முடியாத அளவு வன்மத்தை வைத்திருக்கும் ஒரு பீசு,,,
மேலும் இவருடைய விசம அரசியலை புரிந்து கொண்ட இயக்கங்கள் இவரை மேடை ஏற்றுவதை நிறுத்தி விட்டனர்,,
இதற்கும் நான் மட்டுமே காரணம் என்ற கற்பனை உலகிற்கு இவர் சென்றதே என் மீதான பகைமைக்கு காரணம்,,,
சரி விசயத்துக்கு வறேன் !!
இப்போது விஜயகாந்த் அடுத்தவர்களுக்கு செய்த உதவியை பாராட்டி ஒரு காணொளியில் பேசியவுடனே,,,
அண்ணா,கலைஞர் வரிசையில் விஜயகாந்தையும் சேர்க்க முயற்சி செய்யறேனாம் !!
குறைந்தபட்ச அறிவு நாணயம் இருந்திருந்தால் இப்படி எல்லாம் இட்டுக்கட்டி பேசியிருக்க மாட்டார்,,
என்ன செய்ய,தன்னை பெரிய ராஜவிசுவாசியாக காட்டிக் கொண்டு பொறுக்கித் திங்க வேண்டுமே,,,
விஜயகாந்த் என்ற தனி மனிதனை ஆதரிக்கிறோமே ஒழிய,
அவருடைய அரசியல் நகர்வுகளை ஒரு துளி கூட ஆதரித்தது கிடையாது,,
இன்னும் சொல்லப்போனால் அவருடைய கட்சியின் பெயரை கூட இதுவரை உச்சரித்தது கிடையாது,,,
இன்னும் சொல்லப் போனால் விஜயகாந்தின் பெயரை கூட அவர் இறக்கும் வரை உச்சரித்ததோ,எழுதியதோ கிடையாது.
காரணம் பல வருடங்களாக செயலற்ற நிலையில் இருக்கும் அவரை அரசியல் ரீதியாக விமர்சிக்கும் தேவை கூட ஏற்படவில்லை)
திமுக சேர்ந்த வாகை சந்திரசேகர் விஜயகாந்த் புகழ் பாடுகிறார்,
உதயநிதி விஜயகாந்திற்கு கண்ணீர் விட்டார்,,
அதுவும் கலைஞர் வரிசையில் விஜய காந்தை இணைக்கும் முயற்சியா??
இவை அனைத்தையும் தாண்டி என்னுடைய அதர்மம் சேனலை பின் தொடர்பவர்களுக்கு தெரியும்,,
விஜயகாந்தை பாராட்டிப் போடும் வீடியோவில் கூட சீமான் எதிர்ப்பு உள்ளடக்கமே இருக்கும்,,
ஆனா இந்த மண்டை வீங்கி அதை திமுகவிற்கு எதிரான நகர்வு என திரிக்க பார்க்கிறது,,,
தனிப்பட்ட பகையிருந்தால் அதை நேர்மையான தீர்த்துக் கொள்ள வேண்டும்,,
,அதை விடுத்து அவர் மகன் வயதுடைய என்னை இப்படி நேர்மையற்ற முறையில் தொடர்ச்சியாக வீழ்த்த முயற்சிப்பதை பார்த்தாலும்,அவருடைய பலகீனமான மனநிலையை பார்த்தாலும் பரிதாபமாகவே உள்ளது,,
இது முதல்முறை அல்ல,,, கடந்த பல ஆண்டுகளாக இதையே தான் செய்து வருகிறார்,,,
எனக்கு சாதிய பாசம் என்றும்,தலித் விரோதி என்றும் கடந்த 8,9 ஆண்டுகளாக அவதூறை பரப்பி பார்த்து விட்டார்,,,
நான் அந்த பெரியார் இயக்க தலைவரை திட்டினேன், இந்த தலைவரை திட்டினேன் என பொய்யை பரப்பி பார்த்து விட்டார்,,,
இப்படி எத்தனையோ கட்டுக்கதைகளை கட்டி விட்டாலும் என்னை இயக்க செயல்பாடுகளில் இருந்து அப்புறப்படுத்த முடியவில்லையே என்ற ஆற்றாமையும்,இயக்க தலைவர்கள் இந்த அவதூறை எல்லாம் நம்பி என்னை புறக்கணிக்க வைக்க முடியவில்லையே என்ற ஏமாற்றமும் இன்னும் அவரை விட்டு மீளவில்லை என்பதை உணர முடிகிறது,,,
அவருடைய யூடியூப் சேனலில் இதை எல்லாம் பேசியிருப்பதாக தோழர் ஒருவர் சொன்னார்,,,
சரி 2000 views'க்கு எல்லாம் வீடியோ மறுப்பு போட்டு என் தரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை என்ற காரணத்தால் இந்த பதிவோடு முடித்துக் கொள்கிறேன்,,,
இறுதியாக ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன் !!
தண்ணியக் கூடிணே !! பரிதாபமா இருக்கு !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக