Uma Pa Se : Not to sound pessimistic.
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட Projectகளை நைச்சியமாக ஆள்பவர்கள் தலையில் கட்டப்படும்போது அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்துவிட்டு அதை own செய்வது நன்று.
இல்லாவிட்டால் யாருடைய மோசமான திட்டமிடலுக்காகவோ பழியும் ஏசலையும் சந்திக்க நேரிடும்.
ஏனெனில் கடந்த ஆட்சியில் நடந்த 80% மேற்பட்ட முன்னெடுப்புகள் மக்களுக்காக தொடங்கப்பட்டவை அல்ல.
எதற்காக யாருக்காக என்று ஊருக்கே தெரியும்.
ஏனெனில் வேலூர் ஜோலார்பேட்டையில் கடும் வரட்சியும் தண்ணீர் பஞ்சமும் நிலவிய காலத்தில்,
அங்கிருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டுவரும் "மகத்தான " யோசனையை,
ஒரு நடைக்கு 8.6 லட்சம் ரெயில்வேவுக்கு கட்டி தண்ணீர் கொண்டுவரும் திட்டம் கொண்டுவந்ததும்,
smart city என்ற பெயரில் நடந்த கூட்டுக் கொள்ளை நடந்ததும் கடந்த ஆட்சியில் தான்.
அந்த கட்சியின் முன்னோடி ஆவியாகிவிடும் ஆறுகளுக்கு asbestos sheet போட்டு மூட முடியுமா என்று யோசித்த பொன்மனச்செம்மல்.
சில நேரங்களில் ஈவு இரக்கமே இல்லாமல் பழைய Projectகளை ஒழித்துவிட்டு well planned and thoroughly feasibility ensured projectகள் தொடங்குவது சாலச்சிறந்தது.
உழவர் சந்தை போன்ற மிகவும் தொலைநோக்கோடும், excellent plan of actions மனதில் கொண்டும் தொடங்கப்பட்ட திட்டத்தை நிறுத்தி ஒரு ஆத்மா வீணடித்தது.
அந்த திட்டத்தின் Tempo வையே குலைத்த வரலாறெல்லாம் இருக்கும்போது,
50:50 சான்ஸ் இருக்கும் அல்லது அதற்கும் குறைவான planning இருக்கும் திட்டங்களை தூக்கிப் போட தயங்கக்கூடாது.
பிடித்த தலைவரின் பெயர் வைத்துவிட்டால் போதும், அதை ஏற்றுக்கொள்ளலாம் என்று இருக்கும் Judgemental bias யாவருக்கும் இருக்கும் ( எனக்கும் உண்டு ).
ஆனால் பின்னர் வரப்போகும் சிக்கல்களுக்கு மூல கர்த்தாவை விட்டுவிட்டு குறுக்கால் வந்தவரை நிந்திக்கும் இடத்துக்கு மக்கள் நகரும்போது புரியவைத்துக்கொண்டிருக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக