திங்கள், 4 டிசம்பர், 2023

சென்னை பெருங்குடி.. புரட்டிப் போட்ட 50 செ.மீ. மழை- மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்!

tamil.oneindia.com -  Mathivanan Maran  :  சென்னை: சென்னை பெருங்குடியில் 50 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் நகர்ந்து வந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது.
இன்றும் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. தற்போது சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் விலகி இருந்தாலும்,
 சில மணிநேரங்கள் மழை நீடிக்கும் எனவும் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Cyclone Michaung: Chennai Perungudi receives 50 CM Heavy Rain
சென்னையில் இன்று காலை 8.30 மணிவரையில் பெரும்பாலான பகுதிகளி 21 செ.மீ முதல் அதிகபட்சமாக 29 செ.மீ வரை மழை பதிவாகி இருந்தது.


சென்னை பெருங்குடியில் இன்று காலை 8.30 மணிவரை மிக அதிகபட்சமாக 29 செ.மீ மழை பதிவானது. ஆவடியில் 28 செ.மீ, சென்னையில் 25 செ.மீ, ஆலந்தூரில் 25 செ.மீ, அடையாறில் 24 செ.மீ, மீனம்பாக்கத்தில் 23 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 23 செ.மீ, புழலில் 23 செ.மீ, அண்ணா பல்கலைக் கழகத்தில் 21 செ.மீ என பதிவாகி இருந்தது.

சென்னையில் இன்று காலை முதல் 8 மணிநேரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்தது. இந்த இடைவிடாத அதீத கனமழையால் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகள் எங்கும் பெருவெள்ளக் காடாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

    Three Boats have arrived in Tambaram - Velachery Main Road in Dn -189.#CycloneMichaung#ChennaiRains #ChennaiCorporation #HeretoServe pic.twitter.com/joq8Bmy4uI
    — Greater Chennai Corporation (@chennaicorp) December 4, 2023

இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நேற்றும் இன்றும் சென்னை பெருங்குடியில் மட்டும் 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரனுடன் தொடர்பில் உள்ளோம். இன்று இரவு 12 மணிக்கு மேல் மழை குறையக் கூடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
Cyclone Michaung: Chennai Perungudi receives 50 CM Heavy Rain

சென்னையில் 47 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத பெருமழை பெய்துள்ளது. சென்னை பெருங்குடி பகுதியில் நேற்றும் இன்றுமாக மொத்தம் 50 செமீ மழை பெய்திருப்பது என்பது அதீதத்தின் உச்சம் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக