புதன், 1 நவம்பர், 2023

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து நிர்வாணப்படுத்தி தாக்குதல்

tamil.samayam.com  - அன்னபூரணி :  மணி மூர்த்தீஸ்வரத்தில் பயங்கரம்:
திருநெல்வேலி மாநகர் மணி மூர்த்தீஸ்வரர் பகுதியில் கடந்த 30ஆம் தேதி மாலை வேலையில் பகுதியைச் சேர்ந்த மனோஜ் மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு இளைஞர்களும் குளிக்க சென்றுள்ளனர்.
குளித்துவிட்டு வீடு திரும்பிய போது அப்பகுதியில் மது அருந்தி கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று இரண்டு இளைஞர்களையும் வழிமறித்து தாக்கியுள்ளது.
அத்தோடு அவர்களின் ஜாதியை கேட்டவுடன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்று தெரிந்ததும் இரண்டு பேரையும் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கி உள்ளது.
 கையில் வைத்திருந்த வால் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதுடன் இரண்டு பேரையும் நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து இருக்கிறது.நெல்லை: வீட்டின் முன்பு வைத்திருந்த பைக் தீ வைத்து எரிப்பு..
பட்டியலின இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்:
மாலை வேளையில் இரண்டு பேரையும் பிடித்த அந்த கும்பல் நள்ளிரவு வரை அவர்கள் இரண்டு பேரையும் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களிடமும் பணம் கேட்டு மிரட்டியதுடன் அவர்கள் இரண்டு பேரின் செல்போனையும் பறிமுதல் செய்து அத்தோடு ஐந்தாயிரம் ரூபாயையும் ஏடிஎம் கார்டை கொண்டு அவர்களிடமிருந்து பறிமுதல் செய்திருக்கிறது.

ஆறு பேர் கைது:
இதனை அடுத்து ஒரு கட்டத்தில் இரண்டு இளைஞர்களும் அந்த கும்பலிடம் இருந்து நிர்வாணமாக தப்பித்து வீடுகளுக்கு சென்று அங்கு தகவல் தெரிந்த அவருடைய உறவினர்கள் பெற்றோர் உடனடியாக படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தகவல் அறிந்த தச்சநல்லூர் காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

விபரீதத்தில் முடிந்த ரயில் காதல்! 3வது திருமணம்! கல்லூரி மாணவியை ஏமாற்றிய காதல் மன்னன் கைது!

4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு:
கொடுங்காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்கி காயம் ஏற்படுத்துதல், வழிபறியில் ஈடுபடுதல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போதையில் இருந்த கும்பலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

எனினும் தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் ஜாதிய வன்முறை நிகழ்வுகளின் ஒரு அங்கமாக பட்டியலின இளைஞர்கள் இரண்டு பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு சிறுநீர் கழிக்கப்பட்டு அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்விற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அன்னபூரணி L கட்டுரையாளரை பற்றி
கன்சல்டன்ட்
அன்னபூரணி: ஆங்கில இலக்கியம் மற்றும் ஊடகவியல் துறை பட்டதாரி. அரசியல், கிரைம், சினிமா, பொது செய்திகள், ஆன்மீக செய்திகளில் ஆர்வம் அதிகம். எழுதுவதிலும், புத்தகம் வாசிப்பதிலும் அலாதி பிரியம் உண்டு. ஒரு பயிற்சியாளராக சமயம் தமிழில் எனது முதல் பயணத்தை தொடங்கி, தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக மாவட்ட செய்திகளை எழுதி வருகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக