வியாழன், 16 நவம்பர், 2023

சத்தீஸ்கரில் காங்கிரஸ் மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைக்கும் - புது சர்வே பாஜகவுக்கு தோல்வி1

tamil.oneindia.com - Nantha Kumar R : ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்க வைக்கும் என்றும், பாஜகவுக்கு தோல்வி உறுதி என்றும் பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.
நடப்பு மாதமான நவம்பரில் மட்டும் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதில் மிசோராம் சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு வரும் 25ம் தேதியும், தெலங்கானாவுக்கு வரும் 30ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.வீணாகும் தந்திரம்? சத்தீஸ்கரில் புலம்பும் பாஜக.. மாஸ் காட்டும் காங்கிரஸ்! டைம்ஸ்நவ் கருத்து கணிப்புவீணாகும் தந்திரம்? சத்தீஸ்கரில் புலம்பும் பாஜக.. மாஸ் காட்டும் காங்கிரஸ்! டைம்ஸ்நவ் கருத்து கணிப்பு

இதில் சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. தற்போது இங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். இங்கு நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் இருப்பதால் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 7 ம் தேதி 20 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு 2வது கட்டமாக நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதேநேரத்தில் மறுபுறம் மாநிலத்தில் இழந்த செல்வாக்கை மீட்டு மீண்டும் அரியணை ஏறும் வகையில் வியூகம் வகுத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தான் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. லோக்போல் (LokPoll)எனும் அமைப்பு சார்பில் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 9,000 பேரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ளது.

பாஜகவுக்கு நோ சான்ஸ்.. சத்தீஸ்கரில் மீண்டும் அரியணை ஏறும் காங்கிரஸ்.. எத்தனை தொகுதிகள்? பரபர சர்வேபாஜகவுக்கு நோ சான்ஸ்.. சத்தீஸ்கரில் மீண்டும் அரியணை ஏறும் காங்கிரஸ்.. எத்தனை தொகுதிகள்? பரபர சர்வே

இந்த கருத்து கணிப்பின் முடிவு என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கரில் மீண்டும் ஆட்சியை தனி மெஜாரிட்டியுடன் தக்கவைக்கும் என தெரிவித்துள்ளது. மாறாக இந்த முறை நடக்கும் சட்டசபை தேர்தலிலும் பாஜக பின்னடைவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பின்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 59 முதல் 61 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜக 28 முதல் 30 தொகுதிகளிலம், மற்றவர்கள் பூஜ்ஜியம் முதல் ஒரு தொகுதி வரையும் பெலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ள நிலையில் பாஜகவினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக