ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

ஊடக கருவிகள் இன்று எல்லோர் கைகளிலும் இருக்கிறது

ராதா மனோகர் :  ஊடகவியலாளர்  ஆவது எப்படி என்பது மிகவும் முக்கியமான ஒரு கேள்வி.
நகைச்சுவையாக கடந்து போவதும் தவறில்ல்லை
எல்லாவிதமான சுதந்திர கருத்துக்களுக்கும் சமூக ஊடகங்களில் இடம்பெறுவது நல்லதுதான்
இந்த கேள்வியை ஒரு ஆக்கபூர்வகமாக அணுகவேண்டும் என்று நான் கருதுகிறேன்
எனக்கு தெரிந்த அளவில்  பல பெரிய  சிறிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் எந்த செய்தி கிடைத்தாலும் அது சரியா தவறா என்று சமூக ஊடகங்கள் மூலமும் நிச்சயப்படுத்தி கொள்கிறார்கள்.
ஊடகவியலை சமூக ஊடகங்கள்தான் ஜனநாயக படுத்தி உள்ளன
நான் சொல்வதே செய்தி
நீ இதை கேட்டுத்தான் ஆகவேண்டும் உனக்கு வேறு வழியில்லை என்ற ஆதிக்க பொறிமுறையை சமூக ஊடகங்களில் களமாடும் சாதாரண மனிதர்கள் உடைத்து எறிந்திருக்கிறார்கள்
நாம்  நம்புவதை அல்லது


மக்களுக்கு நல்லது என்று நாம் கருதும் விடயங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினால் நாம் ஊடக கருவிகளை கையாள வேண்டும்
ஊடக கருவிகள் இன்று எல்லோர் கைகளிலும் இருக்கிறது
நமது ஊடக முயற்சிகள் எந்தளவு  மக்களை போய் சேர்க்கிறது  என்பது மக்களின் கையில்தான் உள்ளது
நாம் முன்வைக்கும் விடயம் ஒரே ஒரு மனிதரை மட்டும் போய் சேர்ந்தால் கூட அது வெற்றிதான்
தப்பி தவறி அவை சில நூறு அல்லது சில ஆயிரம் - லட்சம் என்றெல்லாம் போய் சேர்ந்தால் அவை போனஸ் வெற்றிகள் என்று  மனநிறைவு அடையலாம்
இப்படி கிடைக்கும் வெற்றிகள் மூலம்,
மேலும் மேலும் ஊடக ஓடத்தில் உல்லாச பயணம் அல்லது வில்லங்க பயணம் மேற்கொள்ளலாம்!
பொதுவெளியில் கேலிக்கு உரியதாக பேசப்படும் சில காணொளி ஊடகஸ்தர்கள் எக்கச்சக்கமான பார்வையாளர்களை பெறுவதும்
நாட்டுக்கு நல்லது சொல்லும் தளங்கள் வெறிச்சோடி கிடைப்பதுவும்  கூட அன்றாட நிகழ்வுகள்தான்.
சேரும் இடத்தை விட பயணிக்கும் பாதையும் நோக்கமும் சிறந்தது அல்லவா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக