ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை

மாலைமுரசு : மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்
மலேசியாவில் இலங்கை பிரஜைகள் மூவர் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கையர் இருவரை தேடிவருவதாக  மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செந்துலில் உள்ள பெரெஹென்டயன் வீதியில் நேற்றிரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும்; வீடொன்றில்   வீட்டில் தங்கியிருந்தனர் அதன் பின்னரே அந்த வீட்டில் கொலைகள் இடம்பெற்றன என மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அந்த தம்பதியினர் தங்கியிருந்த வீட்டில் மூன்று உடல்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த இருவரும் அந்த வீட்டுக்காரர்களின் மகனுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் தலைகள் பிளாஸ்டிக் பையினால் மூடப்பட்ட நிலையிலும் காணப்பட்டன- அவர்களின் வயது 20 முதல் 40க்குள் இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்து சண்டை பிடிப்பது போல சத்தம் வந்ததை தொடர்ந்து அயலவர்கள் அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களிற்கு சந்தேகநபர்களை தெரிந்திருக்கவேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் அந்த வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக