Raja BN : அண்ணா.. வணக்கம்
தலைவர் கலைஞர் அவர்கள் சென்னை மெரினாவில் ஓய்வு எடுக்க சென்ற போதே
கடமை கண்ணியம் கட்டுப்பாடு கருப்பு சிகப்பு உதயசூரியன் சின்னம் தலைவர் கலைஞரின் உண்மையுள்ள தொண்டர்கள் எல்லாம் ஓய்வு எடுக்க சென்று விட்டார்கள்
இப்போது இருப்பது எல்லாம் வேடந்தாங்கல் பறவைகளும் வியாபாரிகளும் தான்
அண்ணா கடந்த 10 வருடங்களாக கொள்ளை அடித்த பணத்தை வைத்து கொண்டு கழகத்தின் துணை பொறுப்புகளை அமோகமாக விலை பேசி வங்கி விட்டார்கள்
நாம் பணத்திற்கும் எங்கே போவது
நம்மிடம் இருப்பது எல்லாம் 4 கருப்பு சிகப்பு கரைவோஷ்டியும் உதயசூரியன் சின்னமும் தான்
நம்மை யார் மதிப்பார்கள்?
தலைவர் கலைஞரால் அறிவிக்கப்பட்ட அனைத்து போரட்டம் ரயில் மறியல் சிறை நிறப்பும் போரட்டம் எத்தனையோ இடைத்தேர்தல்கள் எல்லாவற்றிலும் உழைத்த தொண்டர்கள்
எல்லாம் பாதிபேர் சுடுகட்டிலும் மிதி பேர் நடுரோட்டிலும் தான் இருக்கிறார்கள்
நேற்று வந்த வேடந்தாங்கல் பறவைகள் எல்லாம் சிம்மாசனத்தில் இருக்கிறார்கள்
இது என்ன நியாயம்?
மரத்தை வைத்து தண்ணீர் ஊற்றியாவன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கவேண்டும்,
நேற்று வந்த வேடந்தாங்கல் பறவைகள் எல்லாம் பலனை அனுபவிக்குமாம்
இதற்கெல்லாம் மாவட்ட நிர்வாகம் முழு ஆதரவு தருமாம்..
எங்கே போய் சொல்வது இந்த கொடுமையை..
அதுவும் நான் சார்ந்த ஈரோடு வடக்கு மாவட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகளுக்கும் வியாபாரிகளும் ஜம்பவன்களக வலம் வருகிறார்கள்
நாம் அவர்களுக்கு எடுபிடி வேலை செய்து கொண்டு இருக்க வேண்டுமாம்..
எல்லாம் பணம் பணம் தான்
அண்ணா தலைமை கழகம் என்று இருக்கிறத இல்லையா என்று தெரியவில்லை
மாவட்ட நிர்வாகம் தான் எல்லாமே என்கிற நினைப்பில் மாவட்ட செயலாளர்கள் செயல் படுகிறார்கள்
இதே நிலை நீடித்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் களவாணி களிடம் களவு போய்விடும் என்பதை தலைமை கழகம் நினைவில் கொண்டு நேற்று வந்த வேடந்தாங்கல் பறவைகளை ஒரு ஓரமாக தள்ளி வைத்து விட்டு கழகத்திற்காக உழைத்த தொண்டர்களுக்கு முக்கிய தத்துவம் தந்தால் உயிரை கொடுத்து கூட கழகத்தை வெற்றி பெற செய்வார்கள்
40\40 தொகுதிகளிலும் கழகம் அமோகமாக வெற்றி பெறும்...
கொங்கு மண்டலத்தில் இல்லை இதே நிலை தான் நீடிக்கும்
மாவட்ட செயலாளர்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று சொன்னால் கொங்கு மண்டலத்தில் கழகம் வெற்றி பெறுவது மிகவும் கஷ்டம் தான்
அப்படி ஒரு வேளை கழகம் தோல்வியுற்றால் யார் வெற்றி பெறுகிறார்களே அங்கே வேடந்தாங்கல் பறவைகள் எல்லாம் சிறகு விரித்து சென்று விடுவார்கள்..
அப்போதுதான் கழகம் கொங்கு மண்டலத்தில் தொண்டர்களை தேடும் நிலை வரும்
அந்த நிலை வரக்கூடாது என்றால் கழகத்திற்காக உழைத்த தொண்டர்களுக்கு முக்கிய தத்துவம் தரவேண்டும்
இப்போது இருக்கும் மாவட்ட நிர்வாகம் பழைய தொண்டர்களுக்கு முக்கிய தத்துவம் தர மாட்டார்கள்
ஆகவே தலைமை கழகம் கொங்கு மண்டலத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.. இது எனது ஆதங்கம் அண்ணா நான் கடந்த 36 ஆண்டுகள் ஈரோடு வடக்கு மாவட்ட தி. மு. க. தொண்டன்...
Raja BN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக