புதன், 16 ஆகஸ்ட், 2023

: ஹரியானாவில் 5 நாட்களில் 1208 (முஸ்லீம்) கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

 Gnaniyar Zubair  : ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் எத்தனை கட்டிடங்கள் இடிக்கப்பட்டன?
என்ற கேள்விக்கு அதிகார வர்க்கத்திடம் பதில் இல்லை.
ஆனால், ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை எடுத்த மதிப்பீட்டின்படி 5 நாட்களில் 1208 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
 ஏறக்குறைய அனைத்தும் முஸ்லிம்களின் வீடுகளே.
 ஏதேனும் இந்துக்களின் வீடுகளும் அதில் உள்ளது.
ஆனால் அது மிகவும் குறைவானதே.
வீடுகளை பிடிப்பதற்கு முன் எவ்வித அறிவிப்பும் அறிவிக்கையும்  கொடுக்கப்படவில்லை.
கலவரத்துக்கு முன்பும் இடிப்பிற்கான எந்த பணிகளும் அறிகுறிகளும் இல்லை.
இன அழிப்பின் முதல் குறி முஸ்லிம் என்று குருஜி கோல்வால்கர் சொல்லிக் கொடுத்த பாடத்தின் அடிப்படையில் இருப்பிட இடிப்புத் திட்டத்தை  சந்தர்ப்பம் கிடைக்கும் போது கடைபிடித்தார்கள். அவ்வளவுதான்...



ஆனால், பாசிச பாஜக அரசு சொல்லுவதை போல இடிக்கப்பட்டவை அனைத்தும் சட்டவிரோத கட்டிடங்களா?
இல்லை. அப்படி எதுவும் இல்லை.  
அவர்கள் முஸ்லிம்கள் என்பது மட்டுமே அவர்களின் பிரச்சினை.
படத்தில் ரேஷன் அட்டைகளுடன் நிற்பவர்கள் நூஹ் நகரில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள நாகினா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்...
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள்...
இவர்களுக்காக 2013ஆம் ஆண்டு பிரியதர்ஷினி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்கள்தான் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன.  

அவ்வாறாயின் அரசு சட்டவிரோதமாக வீடுகளை கட்டிக் கொடுத்ததா..?
இங்கு பிரச்னை  கட்டிடம் சட்ட விரோதம் என்பது அல்ல,   முஸ்லிம்களின் இருப்புதான்...
கலவரம் நடந்த பகுதியில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள கிராமம் ஃபெரோஸ்பூர் சாரிகா.
கலவரம் நடந்த இடத்திலிருந்து வெகு தூரத்தில் இப்பகுதி உள்ளது. இருப்பினும் இங்கும் புல்டோசர்கள் முஸ்லிம்களின் வீடுகளைத் தேடி சென்றுள்ளன...

இரண்டாவது படத்தைப் பாருங்கள்... நூஹ்வில் தங்கள் இல்லங்களை இழந்த பல முஸ்லிம்களைப் போலவே அங்கும் முஸ்லிம் குடும்பங்கள் இப்போது உடைந்த வீடுகள், கல் மற்றும் மண் குவியலான தங்குமிடங்களில் வாழ்கின்றனர்... இரவிலும் பகலிலும்.....
இன்னும் எவ்வளவு காலம் இப்படி என்று கேட்காதீர்கள்.
பாசிசம் முஸ்லிம்களை வதை முகாம்களுக்கு அழைத்துச் சென்று வெகுஜன இன அழிப்புக்காக கொல்லும் காலம் வரும் வரை....ஜெயராஜன் சி என்  சுதந்திர தின துயரங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக