புதன், 16 ஆகஸ்ட், 2023

லாலு பிரசாத் : செங்கோட்டையில் அடுத்த முறை நாங்கள் கொடியேற்றுவோம்!

dinamani.com tசெங்கோட்டையில் அடுத்த முறை நாங்கள் கொடியேற்றுவோம்: லாலு பிரசாத்...
பாட்னா: செங்கோட்டையில் பிரதமா் மோடி கொடியேற்றுவது இதுவே கடைசி முறையாக இருக்கும். அடுத்த முறை நாங்கள் (எதிா்க்கட்சிகள் கூட்டணி) அங்கு கொடியேற்றுவோம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் தெரிவித்தாா்.
பாட்னாவில் உள்ள இல்லத்தில் லாலு பிரசாத், தனது மனைவியும் பிகாா் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியுடன் சுதந்திர தினத்தை கொடியேற்றி கொண்டாடினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இந்த சுதந்திர தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்வதுடன், சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தி, சுபாஷ்சந்திர போஸ், மெளலானா அபுல் கலாம் ஆசாத், அம்பேத்கா் உள்ளிட்டோரின் தியாகத்தை நினைவுகூா்ந்து மரியாதை செலுத்துகிறேன்.



இந்த சுதந்திர தினத்தில் தில்லி செங்கோட்டையில் பிரதமா் மோடி தேசியக் கொடியை ஏற்றியுள்ளாா். அவருக்கு இதுவே கடைசி முறையாக இருக்கும். அடுத்த முறை நாங்கள் அங்கு கொடியேற்றுவோம் என்றாா்.

மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லாலு, இப்போது ஜாமீனில் உள்ளாா். தோ்தலில் போட்டியிடுவதில் இருந்தும் அவா் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக