செவ்வாய், 9 மே, 2023

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை குறிவைக்கும் இந்திய 'டாடா' நிறுவனம்!

TATA a potential investor for SriLankan Airlines?

hirunew  :  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை குறிவைக்கும் இந்திய 'டாடா' நிறுவனம்!
ஸ்ரீலங்கன் விமான சேவையை இந்தியாவின் ‘டாடா குழுமத்துக்கு கையளிப்பது தொடர்பில், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குழுமமான 'டாடா நிறுவனம்' ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா ஆகிய விமான நிறுவனங்களை தன்வசம் கொண்டுள்ளது.


இந்தநிலையில், குறித்த நிறுவனம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீதும் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இலங்கையில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் ஒன்றாகும். அந்நிறுவனத்தை மறுசீரமைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக