செவ்வாய், 9 மே, 2023

ஜப்பான் நிறுவனத்துடன் (Mistsubishi Electric ) புரிந்துணர்வு ஒப்பந்தம்.. 2,004 பேருக்கு வேலைவாய்ப்பு !

ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்.. 2,004 பேருக்கு வேலைவாய்ப்பு !
கலைஞர் செய்திகள் - Praveen : முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நாளை கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் 2,004 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் அந்த வகையில் தற்போது மேலும் ஒரு நிறுவனம் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலையை தொடங்கவிருக்கிறது.
ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்.. 2,004 பேருக்கு வேலைவாய்ப்பு !

ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், மிட்சுபிஷி தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகவுள்ளது.

இந்த தொழிற்சாலை திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, பெருவயல் கிராமத்தில் 52.4 ஏக்கர் நிலப்பரப்பில் உற்பத்தி‌ ஆலை அமைக்கப்பட உள்ளது. 1891 கோடி முதலீட்டில் எட்டு ஆண்டுகளுக்கான முதலீடுகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், வரும் 2029-ம் ஆண்டுக்குள் 2,004 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட உள்ளது.

ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்.. 2,004 பேருக்கு வேலைவாய்ப்பு !

அதோடு இந்த நிறுவனத்தில் சுமார் 60% பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த திட்டம் அக்டோபர் 2025-ம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த தொழிற்சாலைகளுக்கான சோதனை மற்றும் தயாரிப்பு கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையமும் அமைக்கப்பட உள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக