திங்கள், 1 மே, 2023

ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு தீ வைத்த விவகாரம் – ஜெ. ஸ்ரீ ரங்காவுக்கும் தொடர்பு ?

 தேசம் நெட்  -அருண்மொழி :  ;ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயரிட்டுள்ளனர்.
இதனால், ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேசமயம், கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக