திங்கள், 1 மே, 2023

தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைக்கும் நோக்கம் இல்லை- வைகோ பேட்டி

 மாலைமலர் : சென்னை: தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைக்க வேண்டும் என்று ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி சில நாட்களுக்கு முன்பு வைகோவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த கடிதம் ம.தி.மு.க.வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தாயகத்தில் இன்று நடந்த மேதின நிகழ்ச்சியில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது:-
 தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைக்கும் நோக்கம் இல்லை. திருப்பூர் துரைசாமியின் இணைப்பு கோரிக்கையை நிராகரிக்கிறோம்.
இனிமேல் அவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்.
2 வருடங்களாக கட்சிக்கு வராமல் தற்போது அறிக்கை விடுத்திருப்பது எந்த நோக்கத்துடன் இருக்கும்? ம.தி.மு.க.வினர் வற்புறுத்தியதால்தான் என் மகன் துரை வைகோ அரசியலுக்கு வந்தார். ஜனநாயக முறைப்படி கட்சியில் அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக