திங்கள், 24 ஏப்ரல், 2023

நெடுந்தீவு 5 பேரை கொன்ற கொலையாளி கைது

கொலை சந்தேக நபர்
 Maalaimalar  :  :இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த கார்த்தி கேசு நாகசுந்தரி என்பவரது வீட்டில் 51 வயது மதிக்கத் தக்க ஒருவர் வாடகைக்கு குடியிருந்தார்.
சம்பவத்தன்று நாகசுந்தரியின் உறவினர்கள் 4 பேர் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தனர். அப்போது வாடகைக்கு இருந்தவர் அவர்கள் 4 பேரையும் கொடூரமாக கொலை செய்தார்.
அவர்கள் சத்தம் கேட்டு அருகில் உள்ள சுப்பிரமணியம் மகாதேவா (75) என்பவர் ஓடி வந்தார்.
அவரும் கொலை செய்யப்பட்டார்.
பின்னர் கொலையாளி வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். கொலையுண்ட 5 பேரும் இலங்கை தமிழர்கள் ஆவார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தலைமறைவாக இருந்த கொலையாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.



மேலும் அவர் கடந்த 25 ஆண்டுகளாக ஜெர்மனியில் குடும்பத்துடன் வசித்து வந்ததும், 2019-ம் ஆண்டு இலங்கை திரும்பியதும் தெரியவந்தது. மேலும் இவர் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்ததால் போதை பழக்கத்துக்கு ஆளானதால் மன அழுத்தம் ஏற்பட்ட நிலையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஜெர்மனியில் ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டாரா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக