திங்கள், 24 ஏப்ரல், 2023

தமிழக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை காப்பி அடித்துதான் இலங்கை தமிழ் தேசியம் உருவானதா?

ராதா மனோகர் :  இலங்கையில் தமிழ் தேசியம் என்பது ஒரு வெறுப்பு அரசியலாக மட்டுமே உருவானது ..
மக்கள் நலம் சார்ந்த எந்த கோட்பாடும் இலங்கை தமிழ் தேசியவாதிகளிடம் கிடையாது
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் கூறுகளை மட்டும் காப்பி அடித்து,
 இலங்கையில் அதை சிங்கள இனத்திற்கு எதிராக ஒரு வெறுப்பு அரசியலாக கட்டமைத்தார்கள்.
திராவிட சித்தாந்தவாதிகள் முன்வைத்த சுயமரியாதை சமூகநீதி போன்ற கோட்பாடுகளை மறந்தும் கூட தொட்டு பார்க்காமல் வெறும் வெற்று தமிழ் தேசியத்தை முன்னெடுத்தார்கள்.

தமிழ்நாட்டில் இருந்த ஏழு கோடி தமிழர்களின் பின்பலத்தை நம்பி இலங்கையில் பெரும்பான்மையாக இருந்த சிங்கள மக்களை எதிரிகளாக உருவாக்கினார்கள்
சிங்கள மக்களும் தமிழ்நாட்டு பெரும்பான்மையை எண்ணி பயந்தார்கள்.
இப்போதும் இதுதான் நிலைமை.
அதனால்தான்  சீமான் போன்றவர்கள் மூலம் இன்னும் தமிழ்நாட்டில் சிங்கள பெரும்பான்மை இனத்திற்கு எதிராக வன்மம் விதைக்கிறார்கள்.

அந்த வெறுப்பு அரசியல்தான் தமிழ் தேசியர்களின் ஒரே மூலதனம்
வெறுப்பு அரசியலின் கிளை தயாரிப்புக்கள்தான் ஜாதி அரசியல்,
 மதவெறி அரசியல்,
  பிரதேசவாத அரசியல்,
   வர்க்கபேத அரசியல் இத்தியாதி இத்தியாதி..

இந்த வெறுப்பு அரசியல் விதைப்பினால் முழு நாடே மக்கள் வாழமுடியாத அளவு வெறுப்பு விஷ காற்று பரவி,
 மக்கள் தங்கள் தங்கள் ஊர்களையே விட்டு எங்காவது ஒடி தப்புவோம் என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்

உலகின் எந்த மூலைக்கு சென்று பார்த்தாலும் அங்கு ஒரு ஈழத்தமிழன் பேப்பர் இல்லை விசா இல்லை இன்னும் என்னென்னவோ எல்லாம் இல்லை இல்லை என்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் காட்சியை காணலாம்

சில ஆயிரம் புலம்பெயர்ந்தவர்களின் டாலர்களை மட்டும் பார்க்க கூடாது
அதையும் தாண்டி வாழ்க்கையை  தொலைத்து விட்ட இலட்சம் தமிழர்கள் உலகெங்கும்  காணலாம்.
அதை காண்பதற்கு சுயசிந்தனை வேண்டும் சுயமரியாதை வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக