திங்கள், 24 ஏப்ரல், 2023

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம்- தமிழக அரசு

 tamil.oneindia.com - Vishnupriya R :  சென்னை: திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம் என தமிழக அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சக செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணையில் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம். ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம்.


Liquor can be served in marriage halls with license, says Tamilnadu government
மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம். சிறப்பு அனுமதிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மதுபானம் வழங்க அனுமதி இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக