மாலை மலர் : குழந்தை தப்பிக்க முயல போராடும்போது, நாய்கள் சிறுவனின் ஆடைகளை இழுக்கத் தொடங்குகின.
சிறுவன் இறந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருநாய்கள் 5 வயது சிறுவனை சுற்றி வளைத்து கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அம்பர்பேட்டையில் உள்ள சிறுவனின் தந்தை காவலாளியாக பணிபுரிந்த வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த சம்பவத்தின் நடுங்க வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளானபோது பிரதீப் என்ற குழந்தை தனது தந்தையுடன் வேலைக்கு சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில், மூன்று நாய்கள் குழந்தையை நோக்கி வந்து சூழ்ந்து கடிக்க தொடங்கின.
பயந்துபோன சிறுவன் ஓட முயற்சிக்கிறான். ஆனால் நாய்கள் சிறுவனை நெருங்கி தரையில் தள்ளுகின்றன. குழந்தை தப்பிக்க முயல போராடும்போது, நாய்கள் சிறுவனின் ஆடைகளை இழுக்கத் தொடங்குகின. ஒவ்வொரு முறையும் சிறுவன் எழுந்திருக்க முயலும்போதும் நாய்கள் தாக்கி கீழே தள்ளி விடுகின்றன. பின்னர், சிறுவனை நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறின.
பெரிய நாய்கள் குழந்தையை கடித்து ஒரு புறம் இழுத்துச் செல்லும்போது மூன்று சிறிய நாய்கள் பின்தொடர்கின்றன.
குழந்தை, சம்பவ இடத்திலேயே இறந்தது வீடியோவில் பதிவாகி உள்ளது. சிறுவன் இறந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக