செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க 22 பேர் ஆதரவு: 12 பேர் எதிர்ப்பு . மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை

 மாலை மலர் : இந்த வாக்கெடுப்பை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது.
34 பேரின் கருத்துகள் அதில் இடம் பெற்றுள்ளது.
 மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரை  பெருமைப்படுத்தும் வகையில் மெரினா கடலில் பேனா வடிவ நினைவு சின்னத்தை ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக கடந்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதி சென்னையில் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.
இதனை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது.
இதில் மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்பு நிர்வாகிகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.


 பட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
 இந்தநிலையில் பேனா சின்னம் அமைக்க எத்தனை பேர் ஆதரவு அளித்துள்ளனர்,
எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளர் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
இதற்கான விரிவான அறிக்கையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தயார் செய்துள்ளது.
அதன்படி, 34 பேரின் கருத்துகள் அதில் இடம் பெற்றுள்ளது.
அதில் 22 பேர் ஆதரவு கருத்தும், 12 பேர் எதிர்ப்பு கருத்தும் இடம் பெற்றுள்ளது.
இந்த கருத்து கேட்பு கூட்ட அறிக்கையை தமிழக பொதுப்பணித்துறை மத்திய அரசிடம் விரைவில் சமர்பிக்க உள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக