சனி, 16 ஜூலை, 2022

பீல்டு மார்ஷல் சரத் பொன்சேகாவின் கடந்த கால சறுக்கல்கள் .. தெரியாத பக்கங்கள்

Sarath Fonseka Joins Sri Lankan Government, Likely To Be Inducted As  Minister

Ashroff Ali-அஷ்ரப் அலீ  : பதவிக்காக அணிமாறாத சரத் பொன்சேகா?
சரத் பொன்சேகா ஆரம்ப காலத்தில் இடதுசாரி ஆதரவாளர். ஆனால் பின்னர் ராணுவத்தில் அதிகாரியாக சேர ஐ.தே.க. ஆதரவாளோக மாறியவர்..
அதன் காரணமாக 1970ம் ஆண்டு பெப்ரவரி,  பிரதமர் டட்லியின் காலத்தில் ராணுவத்தின் கடேற் அதிகாரியாக இணைந்து கொண்டார்.
பின்னர் 1970 மே 29ம் திகதி ஶ்ரீமாவோ அம்மையார் பதவிக்கு வந்ததும் சுதந்திரக் கட்சி ஆதரவாளனாக மாறி பல்வேறு பயிற்சிகள் மற்றும் இலகுவான பதவி உயர்வுகளுக்கு வழி செய்து கொண்டார்.
அக்காலத்தில் ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்கும் செயற்பாடுகளின் போது அதன் முக்கியஸ்தர்கள் சிலருடன் நெருக்கம் ஏற்பட்டது.,
தென்னிலங்கையின் ஜே.வி.பி. ஆதரவுத்தளமும் அதற்கான காரணமாக இருக்கலாம்.

பல்லவ மன்னன் மானவம்மனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்

 Mr Clean - மிஸ்டர் க்ளீன் :  ரணில் சொன்ன மானவம்ம ராஜாவின் கதை..!
மானவம்ம ஒரு காலத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தின் அனுசரணையில் எந்தச் சிரமமும் இல்லாமல் இலங்கையை வீழ்த்திய ஒரு மன்னன் என்று கூறப்படுகிறது.
அந்த உதாரணத்தை ரணில் சும்மா சொல்லவில்லை, மிகுந்த அர்த்தத்துடன் தான் சொன்னார். சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே இக் கதையைச் சொன்னார். இந்த மானவம்ம மன்னனைப் போலவே தானும்  எதிர்காலத்தில் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதாக வெளிப்படுத்திய சமிக்ஞைதான் அது. அப்போது மக்களுக்குப் புரியவில்லை. இப்போது புரிந்திருக்கும். ஒற்றைத் தேசியப் பட்டியல் ஆசனத்தின் உதவியில் நாடாளுமன்றம் நுழைந்த அவர் இன்று இந்நாட்டின் பிரதமர் ! ரணிலின் ராஜதந்திரத்துக்கு இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு !
புராதன இலங்கையில் மக்களால் ஒருமுறை தோற்கடிக்கப்பட்ட மானவம்ம மன்னன் அதே மக்களை பூஜ்ஜியமாக்கித்  தோற்கடித்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினான்.

நீட் தேர்வுக்கு பயந்து அரியலூர் மாணவி தற்கொலை;

 தினகரன்  : அரியலூர்: அரியலூரில் நீட் ேதர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் இருளர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். குவைத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி உமா. இவர்களது மகள் நிஷாந்தி(19). பிளஸ் 2 முடித்துள்ளார். இவருக்கு சிறு வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்பது விருப்பம்.
தன் ெபற்றோரிடம், நான் டாக்டர் ஆகி மக்களுக்கு சேவை செய்வேன் என அடிக்கடி கூறி வருவாராம். இவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றார்.  பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 539 மதிப்பெண் எடுத்தார்.

கடலூர் மாணவி தற்கொலையா? கொலையா? நரபலியா? உடலில் பல காயங்கள்

மாலைமலர் : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலில் காயங்கள்- பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் கள்ளக்குறிச்சியில் பொது மக்கள் போராட்டம் (கோப்பு படம்) கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலில் காயங்கள்- பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்.
மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தாயார் பேட்டி.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (16), கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மு.க.ஸ்டாலின்... - ரஜினி வெளியிட்ட செஸ் ஒலிம்பியாட் டீசர் | Chess Olympiad teaser released by rajini

hindutamil.in    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மு.க.ஸ்டாலின்... - ரஜினி வெளியிட்ட செஸ் ஒலிம்பியாட் டீசர்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

வெள்ளி, 15 ஜூலை, 2022

பிரதாப் போத்தன் காலமானார் அழியாத கோலங்கள் முதல் துக்ளக் தர்பார் வரை..”

 கலைஞர் செய்திகள்  : பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் இன்று காலமானது திரை உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவானந்தபுரத்தை சேர்ந்த இவர், 1978 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான 'ஆரவம்' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் 1979 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
“அழியாத கோலங்கள் முதல் துக்ளக் தர்பார் வரை..” : பிரபல தமிழ் பட நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்
இதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். இதனிடையே தமிழில் இயக்குநராகவும் களமிறங்கினார். தமிழில் பெரிதாக ஹிட் அடித்த 'மை டியர் மார்த்தாண்டன்', 'சீவலப்பேரி பாண்டி', 'லக்கி மேன்' போன்ற திரைப்படங்களை இவரே எழுதி, இயக்கியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அதிரடி ஆரம்பம்!

May be an image of 3 people and people standing

Nadarajah Kuruparan  :  தத்துவம் இல்லாத நடைமுறையும், நடைமுறையில்லாத தத்தவமும் வரலாறுகளை உருவாக்குவதில்லை!
புரட்சி ஒன்றினால் மட்டுமன்றி ரணில் ஜனாதிபதியாவதை சவாலுக்கு உட்படுத்தவோ,  தடுக்கவோ முடியாது அவர் தற்காலிகமாகவேனும் ஜனாதிபதியாக – முன்னாள் ஜனாதிபதியாக வரலாற்றில் தன்னை இணைத்துக்கொள்வார் என என்னுடைய முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தேன். அதுவே நடந்தேறியிருக்கிறது.
பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
தத்துவம் இல்லாத நடைமுறையும், நடைமுறையில்லாத தத்தவமும் வரலாறுகளை உருவாக்குவதில்லை.
நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் வேறு அரசியல் அமைப்பு விதிமுறைகள், வியாக்கியானங்கள் வேறு.
ரணில் ஒருநாளேனும் ஜனாதிபதியாக வர அனுமதிக்க முடியாது எனக் கூறியோரால் அதனை நிறைவேற்ற முடிந்ததா?
அல்லது அரகளைய – கோட்டா கோ கம போராட்டகாரர்களால் அதனை சாதிக்க முடிந்ததா?

Sri Lanka acting president vows to restore 19th amendment, establish law & order

 ECONOMYNEXT – Sri Lanka’s newly sworn in Acting President Ranil Wickremesinghe plans to facilitate a full restoration of the 19th amendment to the constitution and establish law and order in the face of what he calls an emerging fascist threat before parliament elects the next president.
In a recorded statement released shortly after his swearing in on Friday July 15, Wickremesinghe called for unity, consensus and prioritising the ongoing economic crisis over party politics.
“People expect a change in the political system. An import ant part of this change is restoring the 19th amendment fully. I have started the initial process of presenting a draft bill to parliament for this purpose.
“I will set the stage in this brief period for the new president elected next week to enact the 19th amendment,” he said.
Wickremesinghe did not indicate whether this meant the planned 22nd amendment will be amendment. The 19th amendment, originally enacted under his premiership in the Yahapalana government, somewhat significantly clipped the wings of Sri Lanka’s all-powerful executive presidency and strengthened parliament. The 20th amendment brought under former President Gotabaya Rajapaksa went beyond bringing back these powers, resulting in a weakened parliament.

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார் .. அதிமேதகு ஜனாதிபதி என்ற சொல்ல நீக்க உத்தரவு ரணில் அதிரடி

மாலை மலர்  : இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றார்.
தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனே பதவி விலகக்கோரி போராட்டம் தொடர்ந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.
பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர், சவுதி சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் காவேரி மருத்துவ மனையில் இருந்து இன்று வீடு திரும்புவார்

தினத்தந்தி  : சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தனிமைப்படுத்தி கொண்டு இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்  சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக நேற்று பிற்பகல் 12 மணிக்கு மேல் அவருடைய இல்லத்தில் இருந்து புறப்பட்டு வந்தார்.
மருத்துவமனையில் அனுமதி அப்போது அவருக்கு தொண்டை மற்றும் உடல் வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகலில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சுப்பிரமணியன் சாமி : ராஜபக்சேக்கள் இலங்கையில் இருந்து வெளியேறுவது இந்தியாவிற்கு நல்லதல்ல

 Mathivanan Maran -    e Oneindia Tamil News :  டெல்லி: இலங்கையைவிட்டு ராஜபக்சேக்கள் வெளியேறுவது இந்தியாவுக்கு நல்லது அல்ல; இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இலங்கையைவிட்டு தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே, பதவியை விட்டு ஓடிய மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் சுப்பிரமணியன் சுவாமி. இலங்கையில் ராஜபக்சேக்களை அந்நாட்டு சிங்கள மக்களே ஓட ஓட விரட்டுவது கண்டு ரத்தக் கண்ணீர் வடிப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. ராஜபக்சேக்களைப் பாதுகாக்க இந்திய ராணுவத்தையே பிரதமர் மோடி அனுப்ப வேண்டும் என்றும் அவர் குரல் கொடுத்தவர்

கொழும்பில் கொண்டாட்டம் -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்து வந்த வரலாற்று பாதையில் சில பக்கங்கள்

 ராதா மனோகர் :  2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிக்கு மிக அருகில் இருந்தார்
குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகள் பெருவாரியாக ரணிலுக்கே கிடைக்கும் நிலை இருந்தது
இந்நிலையில் வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளை எப்படியாவது தடுத்து விட்டால் போதும் என்ற சூழ்நிலையில் ... லஞ்சம் மூலம் அதை சாதித்தார் .. இது வரலாறு
வாங்கிய பணத்திற்காக ராஜபக்சேவை யதார்த்தவாதி என்று பிரபாவால் புகழப்பட்ட  வேடிக்கை எல்லாம் அரங்கேறியது
இயக்கத்தின் கட்டளைப்படி தமிழர்கள் அத்தேர்தலை புறக்கணித்தார்கள்  ..
மீறி வாக்களிக்க சென்றோர் அந்த அன்பான சர்வாதிகாரிகளால் தாக்கப்பட்டார்கள்
இருவரும் சேர்ந்து ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை அன்று களவாடினார்கள்
கால சக்கரம் சுழன்றது ..இப்போது இடைவேளை
காலப்போக்கில் யாதார்த்தவாதியின் குடும்ப சர்வாதிகாரம் தங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றவரை போட்டு தள்ளியது  காலச்சக்கரம் மீண்டும் சுழன்றது

வியாழன், 14 ஜூலை, 2022

இலங்கை அரசியல் - தெரியாத இரகசியங்கள்! ஆட்சியாளருக்கு எதிராக பன்னிரண்டு வருடம் போராடியவரின் பதிவு

Process of Political Party Development in Sri Lanka; Where Are We? (Part  One) | Sri Lanka Brief | News, views and analysis selected of human rights  and democratic governance in Sri Lanka

Ashroff Ali-அஷ்ரப் அலீ  :  பன்னிரண்டு வருட போராட்டம் வெற்றி
2004ம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் ஆனவுடன் அவரின் மொழிபெயர்ப்புப் பணிகளில் இணைக்கப்பட்டேன்
அதன் பின் 2005 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் தமிழ் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட்டேன்.  என் இனிய நண்பர்களான மறைந்த மங்கள சமரவீர, ஶ்ரீபதி சூரியாரச்சி, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, மற்றும் டலஸ், பசில் ஆகியோருடன் நானும் சமமாக உட்கார்ந்து தேர்தல் பிரச்சாரங்களை திட்டமிட்ட காலம் அது.
2005 தொடக்கம் 2010 வரை பல்வேறு அதிகாரங்கள். ஒரு கட்டத்தில் காணாமல் போனோர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இணைச் செயலாளர் வரை அதிகாரம் நாளுக்கு நாள் கூடியது. நில்பலகாய, தாருண்யட்ட ஹெடக் என்று எல்லாவற்றிலும் முக்கிய இடம்.
2008 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரப் பணிகளின் பொறுப்பாளர்
2010 ஜனாதிபதித் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுத் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்.
பொதுத் தேர்தலில் வென்ற பின்னர் தான் ராஜபக்‌ஷ கும்பல் இனவாதப் பாதையில் நீண்ட தூரம் பயணிக்கத் தொடங்கியிருக்கும் சங்கதி வௌியே வரத் தொடங்கியது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

Gurusamy News18 Tamil Naduமுதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது  நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக திமுக செயல்படுவதாக கூறிப்படுவதில் உண்மை இல்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில்  இருந்தால் ஏதாவது இடையூறுகள் இருக்கும் என்பதால் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பார் என திமுக பொதுச்செயலாளரும், நீர்பாசன துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் : ''என்னை சின்னவர்... சின்னவர்... என்று அழைக்காதீர்கள்.

சின்னவர் என்று என்னை அழையுங்கள்: உதயநிதி ஸ்டாலின் - Udhayanidhi Stalin says  call me as Chinnavar | Indian Express Tamil

நக்கீரன் செய்திப்பிரிவு :  அதிமுகவுக்கு வரலாறு கிடையாது என திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
அண்மையில் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், ''என்னை சின்னவர்... சின்னவர்... என்று அழைக்காதீர்கள்.
நான் உண்மையாவே சின்னவன்தான் எனவே வேணும்னா சின்னவன்னு அழைங்க. சுந்தர் அண்ணன் இதுவரை 5 முறை சட்டமன்ற உறுப்பினர், எழிலரசன் இரண்டாவது முறை சட்டமன்ற உறுப்பினர். நான் இப்பொழுதுதான் முதல் முறை. எனவே சின்னவர்னு சொல்லவேண்டாம்.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணி கூண்டோடு நீக்கம்- எடப்பாடி பழனிசாமி அதிரடி

 மாலை மலர் :  பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கலவரத்தில் முடிந்தது.
நீதிமன்ற அனுமதியின்பேரில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின்னர் அவர் கட்சியின் நிர்வாகிகளை தொடர்ந்து மாற்றி வருகிறார்.
அவ்வகையில் இன்று ஓபிஎஸ் அணியினரை கூண்டோடு நீக்கியிருக்கிறார்.

50 மணி நேர தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு ! கடந்த நாட்களில் அரங்கேறிய நாடகங்கள் !

வீரகேசரி - எம்.எப்.எம்.பஸீர் : மக்களின் ஆதரவை இழந்துள்ள நிலையில், பதவி விலகுமாறு மக்கள் வலியுறுத்தும் பின்னணியில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மனைவி, பாதுகாப்பு உத்தியோகத்தருடன் நாட்டிலிருந்து 13 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை  இரகசியமாக வெளியேறினார்.
விமானப்படையின் அன்டனோ 32 ( ஏ.என். 32) ரக விமானத்தில் மாலைத் தீவின்  தலைனகரான மாலேவுக்கு  அவர் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப்படை ஊடகப் பணிப்பாளர் விங் கொமாண்டர் துஷான் விஜேசிங்க அறிக்கை ஊடாக உறுதி செய்தார்.
அதன்படி கடந்த ஜூலை 9 ஆம் திகதி முதல் சுமார் 50 மணி நேரம் தனது சொந்த நாட்டின் மக்கள் முன் தோன்ற முடியாது தலைமறைவாக,  முப்படை முகாம்களுக்குள் காலத்தை கழித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்  , தலைமறைவு வாழ்வு நிறைவுக்கு வந்துள்ளது.

புதன், 13 ஜூலை, 2022

இலங்கை நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற போராட்டகாரர்கள் மீது நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டு வீச்சு

BBC tamil :  இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயற்சித்த மக்களை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய மக்கள்
பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்கள் மகிழ்ச்சியில் செல்ஃபி எடுத்து கொண்டனர். பின்னர் ரணில் மற்றும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் என்கிறார் கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் டேசா வாங்.
இரண்டாம் மாடியில், பிரதமர் அலுவலகம் என்று எழுதி வைக்கப்பட்டிருந்த பலகைக்கு மேலே போராட்டக்காரர்கள் இலங்கையின் கொடியை ஏந்தி நின்றனர்.
போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தப்பட்டது இருப்பினும் பாதுகாப்புப் படையினரை மீறி போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகம் உள்ளே நுழைந்தனர்.

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் பிரகடனம்! நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராணுவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு

 வீரகேசரி : இலங்கை பதில் ஜனாதிபதியாக பொறுப்பெடுத்து கொண்ட  பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்தையும் செய்வதற்கு” ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தன்னுடைய அலுவலகம் மற்றும் மற்ற அரசு கட்டடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
“அரசியலமைப்பு சட்டத்தைக் கிழித்து எறிய முடியாது. சட்டத்தை பாசிசவாதிகள் கையிலெடுப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஜனநாயகத்திற்கு எதிரான இந்த பாசிச அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” எனவும் அவர் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் சமீபத்திய இந்த அறிவிப்பு, இலங்கை தலைநகரில் ராணுவம் பாதுகாப்பை நிலைநிறுத்த உள்ளது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கொழும்புவில் உள்ள பிபிசி நிருபர் கூறுகிறார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அதிபராக தெரிவு செய்யப்படுகிறார்.. பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானம்

Ranil Wickremesinghe: Sri Lanka Leader Names Opponent as PM in Push for  Unity - Bloomberg

கண்டி நியூஸ் : இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக கோட்டாபய ராஜபக்ச, இன்று (13ம் திகதி) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
 இதன்படி, பதில் அதிபராக  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (13) பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 புதிய  அதிபரை   தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
 அதற்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் அன்றைய தினம் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பியோட்டம்...

தினத்தந்தி  :  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ளார்.
கொழும்பு, இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார்.
அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவு தப்பிச்சென்றுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலக மோதல்: ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்கு

hindutamil.in : சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய் துள்ளனர்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கினர். இந்த மோதலில் 2 போலீஸார் உட்பட 47 பேர் காயம் அடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

செவ்வாய், 12 ஜூலை, 2022

மழையில் காலியான பாஜகவின் குஜராத் மாடல் பிம்பம் ..ஒரு சில மணிநேர மழைக்கே உதிர்ந்து போன நகரங்கள்

பாஜக-வின் போலி பிம்பத்தை அம்பலப்படுத்திய கனமழை.. குஜராத் மாடல் லட்சனம் இதுதானா?: வெளுத்து வாங்கிய மக்கள்!

கலைஞர் செய்திகள் : குஜராத்தில் பெய்த சில மணிநேர மழை பா.ஜ.கவின் பொய் பிம்பத்தை வெளிக்கொண்டு வந்துவிட்டது என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
பாஜக-வின் போலி பிம்பத்தை அம்பலப்படுத்திய கனமழை.. குஜராத் மாடல் லட்சனம் இதுதானா?: வெளுத்து வாங்கிய மக்கள்!
வரலாற்று காலம் முதலே குஜராத் தொழிற்துறையில் சிறந்து விளங்கியது. சூரத் போன்ற நகரங்கள் முகலாய ஆட்சி காலத்தில் முக்கிய வணிக தளமாக உருவெடுத்தது.
சுதந்திரம் அடைந்த பின்னர் அகமதாபாத் போன்ற நகரங்கள் நல்ல தொழில்துறை வளர்ச்சி பெற்றன. ஆனால் குஜராத்தின் இந்த வளர்ச்சி என்பது நகரங்களில் மட்டுமே காணப்படுகிறது.
அதன் ஊரக பகுதிகள் பல அடிப்படை தேவைகள் கூட இல்லாத இடங்களாகதான் திகழ்கிறது

பஸில் ராஜபக்‌ஷேவை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய ஊழியர்கள் + பயணிகள்!

மின்னம்பலம் : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவின் சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பஷில் ராஜபக்‌ஷே கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிக்க முயற்சித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆளும் அரசாங்கத்துக்கு எதிராக நடந்த மக்கள் புரட்சியில் ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். தற்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலகினர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று

மாலைமலர் :முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டாக்டர்களின் ஆலோசனைப்படி குமாரசாமி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில்  அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.     அனைவரும் முக கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு பாதுகாப்பாய் இருப்போம் என பதிவிட்டுள்ளார்.


அதிமுக பலவீனப்படுவது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல: திருமாவளவன்

Thol thirumavalavan | Life | Politics | History | News | Works | தொல். திருமாவளவன் வாழ்க்கை வரலாறு: அரசு ஊழியர் முழு நேர அரசியல்வாதியாக மாறிய கதை  - முழுமையான தொகுப்பு
மின்னம்பலம் : அதிமுக பலவீனப்படுவது அக்கட்சிக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டு நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (ஜூலை 11) செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக பலவீனப்படுவது அக்கட்சிக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டு நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிமுகவின் பலவீனத்தை சங் பரிவார் அமைப்பினர் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் சங் பரிவார் அமைப்பு வலிமை பெறுவது தீங்கு விளைவிக்கும். தென்னிந்திய மாநிலங்கள் தான் பாஜகவின் அடுத்த இலக்கு என்று அமித் ஷா பேசியிருக்கிறார். தமிழ்நாட்டை மனதில் வைத்தே அவ்வாறு பேசியிருக்கிறார்.

இரா. செழியன் : இந்திய நாடாளுமன்றத்தின் மொழிப் பிரச்னை!.. 11.feb.2010

Consent to be......nothing!: June 2012

தினமணி -இரா. செழியன் :  இந்திய நாடாளுமன்றத்தின் மொழிப் பிரச்னை!
உலகில் எந்த நாட்டிலும் உள்ள மக்களுக்கும் தம்முடைய விருப்பங்களையும், கருத்துகளையும் எளிதாக உணர்வுடன் வெளியிட அவர்களின் தாய்மொழி தான் முதன்மையான சாதனமாகும்.​ அதிலும், குறிப்பாகத் தமிழ் மக்களுக்குத் தனிப்பட்ட முறையில் வளமையும், தொன்மையும் மிக்க தாய்த்தமிழைப் போற்றிடும் ஆர்வமும், பண்பாடும் ஆழ்ந்து அமைந்துள்ளன.​ ​ ​ ​ ​
தமிழர்களின் தாய்மொழிப் பற்று இலக்கிய அளவுடன்,​​ வரலாற்று நாகரிகப் பெருமையுடன் நிற்கவில்லை.​
1937ல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த இராஜாஜியால் பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயமாகப் புகுத்தப்பட்டபொழுது,​​ தாய்த் தமிழைக் காத்திட தமிழர்களின் போராட்டம் நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றது.​ இராஜாஜி அமைச்சரவை நீங்கியதும்,​​ 1939ல் கட்டாய இந்தி கைவிடப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க : ரவுப் ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது :


வீரகேசரி : ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது : ரணில் காட்டம் | Virakesari.lk
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
"நீங்கள் பதிவிட்ட டுவிட்டரே எனது வீடு தீக்கிரையாகக்  காரணம்" இன்று (11) திங்கட்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரவூப்  ஹக்கீமை கடுமையாகச்  சாடியுள்ளார்.
இதனையடுத்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பெரும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஆற்றிய உரையின் போதும் இதனை குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.   link வீரகேசரி
இதேவேளை, சர்வகட்சி ஆட்சியொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 
 

திங்கள், 11 ஜூலை, 2022

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரமாண்ட விமானம்: 17 ஆண்டுகளில்.. முதல் முறை.

 கலைஞர் செய்திகள்   :  உலகத்திலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான திமிங்கல வடிவிலான, "ஏா்பஸ் பெலுகா" முதல் முறையாக சென்னை விமானநிலையத்திற்கு வந்தது
நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு ஏர்பஸ் விமானம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பயணிகள் விமானம், சரக்கு விமானங்களையும் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், பெரிய ரக பொருட்களைச் சரக்கு விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கு வசதியாக, திமிங்கல வடிவில், சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் எனும் "பெலுகா" A300-608ST என்ற புதிய சரக்கு விமானத்தை, 1995 ஆம் ஆண்டில் ஏர்பஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.

சசிகலா நடராஜன் : அ.தி.மு.க. பொதுக்குழு சட்டப்படி செல்லாது

 மாலை மலர் :   ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றார் சசிகலா. அ.தி.மு.க. பொதுக்குழு நடந்ததே செல்லாது என தெரிவித்தார்.
சசிகலா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது, அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது. தலைமை பதவியை அடித்துப் பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது. பணம் அதிகாரம் வைத்து அடைந்த எந்தப் பதவியும் நிலைக்காது. சட்டப்படி செல்லாது.
நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்து விடக்கூடாது.
ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு, நிஜத்தை நிச்சயம் அடைவோம். ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைதான் ஆதரிக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளை நாடுகடத்த எஸ் ஜெ வி சந்திரஹாசனுக்கு யார் அனுமதி கொடுத்தது?

28 வருடங்களாக இங்கேயே வாழ்ந்து பழகிய, தனது சொந்த நாட்டில் காணி நிலம், உதவக்கூடிய அளவிலான சொந்தங்கள் என எதுவுமற்று, தாயகம் திரும்ப விரும்பாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு (இந்திய குடியுரிமை) , என எம்முன் இருக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பத்தத்தை ஏற்படுத்தி செல்வதே அகதிகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும், அதை விடுத்து விரும்புவர்களை உதிரியாக அனுப்பி வத்துவிட்டு அங்கு சென்று என்ன பாடுபட்டாலும் கவலையில்லை எனும் நிலையில் அகதிகள் பிரச்சினையை அனுக கூடாது என்பதே தமிழகத்தில் வாழும் ஒட்டு மொத்த அகதிகளின் விருப்பமாக இருக்கிறது...
May be an image of ‎text that says '‎VOLTE LTE 10:53 புதினப்பலகை Puthinappalakai.com ה 4000 தமிழ் அகதிகளை கப்பலில் அனுப்புகிறது இந்தியா- சிறிலங்கா அரசுக்கு தகவல் இந்தியச் செய்தியாளர் JUL 09, 2018 14:00 செய்திகள்‎'‎

ந. சரவணன் : ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் (ORGANIZATION FOR EZHAM REFUGEES REHABILITATION - OFERR) எனும் அமைப்பு தமிழக வாழ் இலங்கை  அகதி மக்களுக்கு செய்த பணிகள் அளப்பறியது.பல்வேறு பன்னாட்டு தொண்டு நிறுவனகளுடன் இணைந்து மருத்துவம், சுகாதாரம், கல்வி போன்ற அடைப்படை தேவைகளை  மிகுந்த அக்கரையோடு  கணிவுடன் நிவர்த்தி செய்தமை பாராட்டுக்குறியது.ஆனால்.....
தமிழக வாழ் இலங்கை அகதி மக்களின்  சார்பாக ஒரு  தலைமைக்கான  எந்த ஒரு தேர்தலும் நடக்கவில்லை, யாரும் தலைமையேற்கவுமில்லை, எந்த ஒரு சூழ் நிலையிலும் அகதி மக்கள் ஒன்றிணைந்து, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் எனும்  நிறுவனம் எங்களது பிரதி நிதியாக இருந்து எங்கள் சார்பாக எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யலாம் எனவோ,தேவைகளினடைப்படைகளில்  எங்களுக்காக மற்றவர்களிடம் எங்கள் அனுமதியின்றி இந்நிறுவனம்  வாக்குறுதிகளை வழங்கலாம் என்றோ, நாங்கள் இங்கு அகதியாகவே இருப்பது, அல்லது நாங்கள் தாயகம் திரும்புவது தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்பதுப்போன்றோ எந்தவித உத்திரவாதத்தையும் யாரும் வழங்கி விட வில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு மாதங்களில் என்ன சாதித்தார்?

May be an image of 8 people and text that says 'SHH CNNNEW NEWS BREAKING NEWS நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள லிட்ரோ லிட் கேஸ், 100,000MT LP எரிவாயுவை வெற்றிகரமாக கொள்முதல் செய்துள்ளது. மொத்த பெறுமதியாக $90 மில்லியன் செலவாகும். உலக வங்கி 70 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது, மீதமுள்ள $20 மில்லியன் லிட்ரோ நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை நான்கு மாதங்களுக்கு நாட்டிற்கு வழங்க போதுமானதாக இருக்கும். 70% தொகை உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும். இதன் மூலம் 5 மில்லியன் 12.5 கிலோ சிலிண்டர்கள், மில்லியன் 5 கிலோ சிலிண்டர்கள் மற்றும் மில்லியன் 2.5 கிலோ சிலிண்டர்கள் பெறப்படும். மீதமுள்ள 30% வணிக பயன்பாட்டிற்கு வழங்கப்படும். லிட்ரோவினால் 20 மில்லியன் டொலர்கள் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 33,000 தொன் எல்பிஜி ஆரம்ப தொகை ஜூலை முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்து விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும்.'

Mr Clean - மிஸ்டர் க்ளீன் :  ரணில் பிரதமராகி இரண்டு மாதமும் நிறைவாக இல்லை.
* சொன்னது போல சமையல் வாயுக்களை பெற்று தந்துள்ளார்.
நாளை முதல் விநியோகம்.
* யூரியா உரத்தை பெற்றுத்தருவதாக சொல்லி இருந்தார்.
அதுவும் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
* 05 பில்லியன் பணத்தோடேயே பொறுப்பெடுத்தார் , இன்று 19 பில்லியன் பணம் சேர்க்கப்பட்டுள்ளது.
* IMF மூலம் உதவி பெற முடியாதிருந்தனர்.
அதற்கான பணிகளையும் ரணில் பூர்த்தி செய்யும் தருவாய்க்கு கொண்டு வந்தார்.
சர்வதேச நிபுணர்கள் இங்கு தங்கியுள்ளனர்.
* இம்மாத நடுப்பகுதியிலே இடைக்கால வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றிலே சமர்ப்பிக்கவிருந்தார்.
அதிலே மக்களுக்கான வாழ்வாதார திட்டங்களே முக்கியத்துவம் பெற இருந்தது.

ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் கற்களை வீசி மோதல் -ரத்தகளறியான ராயப்பேட்டை. ஓபிஎஸ் வாகனம் மீது கல்வீச்சு

Jeyalakshmi C  -  e Oneindia Tamil :  சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுமா நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அதிமுக அலுவலகம் முன்பு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் கற்களை வீசியும் கம்புகளை வீசியும் தாக்கி வருகின்றனர்.
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளருக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.
சென்னை மனப்பாக்கத்தில் நீச்சல் குளம் பார்த்த 2 BHK வீடு @ 94 லட்சத்தில்* அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி வந்த ஓ. பன்னீர் செல்வம் வாகனம் மீது கற்கள் வீசப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வத்தின் வாகனம் அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டது.

ஞாயிறு, 10 ஜூலை, 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா! பலரும் அறியாத மறுபக்கம்

Sri Lanka - Ranil Wickremesinghe warns of a food shortage in Sri Lanka -  Telegraph India

Ashroff Ali-அஷ்ரப் அலீ  :   இலங்கையில் பிறந்தமைக்காக முதன்முறையா வெட்கி தலை குனிகின்றேன்.
ரணில் என்ன செய்தார்?
* 49 வருட அரசியல்வாழ்வில் ஒருநாள் கூட சம்பளம், கொடுப்பனவு, வாகன பர்மிட், தனிப்பட்ட பிரதிபலன் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை
* ரணிலின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் சம்பளம் பல்கலைக்கழத்தில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதியுதவியாக அன்பளிப்புச் செய்யப்பட்டது
* ரணில் மற்றும் பேராசிரியர் மைத்திரி தங்களின் தனிப்பட்ட வருமானத்தில் ஐந்து அநாதை இல்லங்களை நடத்தி வருகின்றனர். அதில் பயின்ற பலர் இன்று மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, சிறந்த ஊடகவியலாளர்களாக மாறியுள்ளனர்
அப்படிப்பட்ட பேராசிரியர் மைத்திரி கடுமையான மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் தான் அவர்கள் வசித்த வீடு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது

திராவிட சினிமா - பராசக்தி இல்லயாம் பரா சத்தியாம்?

 ராதா மனோகர் : திராவிட சினிமாக்கள் அரங்கேற்றிய சமூக புரட்சி பற்றி இன்று பெரிதாக பேசப்படுவதில்லை.
மாறாக ஆரிய பார்ப்பனீய சினிமாக்கள் ஏதோ மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களை விதைப்பதாக பொதுவெளியில் பரப்புரை நடக்கிறது
அன்றைய திராவிட சி
னிமாக்கள் வெறும் சமூக சீர்திருத்தங்களை தாண்டி ஒரு சிந்தனை புரட்சியை நடத்தி காட்டியிருக்கிறது
இன்று கூட நினைத்து பார்க்க தயங்கும் பல விடயங்களை திராவிட சினிமாக்கள் அன்றே மக்களின் மனங்களில் பதித்து விட்டிருக்கிறது
வட  இந்தியாவில் மதவாதம் கொழுந்து விட்டு எரிகிறது  . ஜாதியும் மதமும் கொலைகள்  மூலம் விவாதிக்கப்படும் அளவுக்கு அவை தவறான பாதையில் வெகு தூரம்  சென்றுவிட்டன
மறுபுறம் தென்னிந்தியாவை நோக்கினால் .. குறிப்பாக தமிழ்நாட்டை நோக்கினால் இந்த சிந்தனை வளர்ச்சி வெகு தெளிவாகவே தெரிகிறது  

ரணில் விக்கிரமசிங்கவின் 10000 புத்தகங்கள் கொளுத்தப்பட்டது குறித்து ரணில் கண்ணீர் பேட்டி

ரணில் விக்ரமசிங்க

BBC Tamil :  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு போராட்டக்காரர்கள் சிலரால் தீக்கு இரையாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில், கட்சி உறுப்பினர்களிடையே சிறப்பு கூட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அதில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் பேசிய அவர், "சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது குறித்து தான் எந்த விதத்திலும் கவலை கொள்ளவில்லை ஆனால் தாம் படித்த புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதை எண்ணிதான் கவலைக் கொள்கிறேன்," என தெரிவித்தார்.

உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 15 பேர் உயிரிழப்பு

மாலை மலர்:   உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டன. டொனெட்ஸ்க் நகரில் ரஷிய படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்தது.
கீவ்: உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டன. 20-க்கும் மேற்பட்ட பீரங்கி, மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் எல்லையை நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருவதாகவும் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது ரஷிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று பலத்த சேதமடைந்தது. இந்த தாக்குதலால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் கோத்தபாய ஜூலை 13இல் பதவி விலகுவார் - சபாநாயகர் தகவல்

BBC  Tamil   : இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து, வரும் 13ஆம் தேதி பதவி விலகுவேன் என்று கோட்டாபய ராஜபக்ஷ தம்மிடம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மஹிந்த யாப்பா அபேவர்தன, சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் தோன்றிப் பேசினார். அப்போது அவர், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுமாறு நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கோட்டாபயவிடம் தெரிவித்ததாகவும் அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.மேலும், அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் விதமாக கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை வரை ஜனாதிபதியாக இருப்பார் என்று அபேவர்தன கூறினார்