வெள்ளி, 15 ஜூலை, 2022

பிரதாப் போத்தன் காலமானார் அழியாத கோலங்கள் முதல் துக்ளக் தர்பார் வரை..”

 கலைஞர் செய்திகள்  : பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் இன்று காலமானது திரை உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவானந்தபுரத்தை சேர்ந்த இவர், 1978 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான 'ஆரவம்' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் 1979 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
“அழியாத கோலங்கள் முதல் துக்ளக் தர்பார் வரை..” : பிரபல தமிழ் பட நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்
இதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். இதனிடையே தமிழில் இயக்குநராகவும் களமிறங்கினார். தமிழில் பெரிதாக ஹிட் அடித்த 'மை டியர் மார்த்தாண்டன்', 'சீவலப்பேரி பாண்டி', 'லக்கி மேன்' போன்ற திரைப்படங்களை இவரே எழுதி, இயக்கியுள்ளார்.



தற்போது மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், அண்மையில் ஜோதிகா நடிப்பில் வெளியான 'பொன்மகள் வந்தாள்', விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்தும் வந்தார். 69 வயதாகும் இவருக்கு சமீபத்தில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டது

இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த இவர், இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரை உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், திரை பிரபலங்கள், ரசிகர்கள் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக