வெள்ளி, 30 டிசம்பர், 2022

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மறைவு

 PM Narendra Modis mother Heeraben Modi dies

tamil.oneindia.com  -  Mani Singh S  :  அகமதாபாத்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார். தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் மோடி மிகவும் உருக்கமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. 100 வயதான ஹீராபென் மோடி குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதரருமான பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்தார்.


பிரதமர் மோடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது தாயாரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு வருவதுண்டு. இந்த நிலையில், 100 வயதான ஹீரா பென் மோடிக்கு அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன் தினம் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஓய்ந்தது மழை.. தொடர்கிறது பனிமூட்டம்.. அடுத்த 2 நாட்களுக்கு மழை வறண்ட வானிலை.. புது அப்டேட்ஓய்ந்தது மழை.. தொடர்கிறது பனிமூட்டம்.. அடுத்த 2 நாட்களுக்கு மழை வறண்ட வானிலை.. புது அப்டேட்

அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலமானார். தாய் இறந்த செய்தியை தனது ட்விட்டரில் பிரதமர் மோடி மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Prime Minister Modi's mother Heeraben Modi passed away while undergoing treatment at the hospital. Prime Minister Modi has posted a very emotional tweet about his mother's death

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக