செவ்வாய், 11 அக்டோபர், 2022

அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் தேர்தல் முறைகேடு வழக்கு தொடரும்! உச்ச நீதிமன்றம் அதிரடி !

ஓபி ரவீந்திரநாத் குமார்

tamil.oneindia.com  -   : டெல்லி : தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தேர்தல் வெற்றியை செல்லாது என தொடரப்பட்ட வழக்கில், ரவிந்திரநாத்தின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்ததோடு, வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுகவில் அதிகார மோதலில் பின்னடைவை சந்தித்து வரும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தற்போது ஆதரவாக நிற்பவர்களில் முக்கியமானவர் ரவீந்திரநாத். ஓபிஎஸ்ஸின் மூத்த மகனான இவர் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருக்கிறார்.
கடந்த 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் மண்ணைக் கவ்விய நிலையில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் மட்டும் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.


கழற்றிவிடப்படும் கங்குலி.. பிசிசிஐயில் ஜெய்ஷாவுக்கு கூடும் “பவர்”! புதிய தலைவராக உலகக்கோப்பை வின்னர் கழற்றிவிடப்படும் கங்குலி.. பிசிசிஐயில் ஜெய்ஷாவுக்கு கூடும் “பவர்”! புதிய தலைவராக உலகக்கோப்பை வின்னர்

ஓபி ரவீந்திரநாத் குமார்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி படு தோல்வியை சந்தித்த நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் ஓபி ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதோடு அதிமுக நாடாளுமன்ற குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான விவகாரங்களில் டெல்லியில் உள்ள பாஜக மேலிட தலைமையை தொடர்பு கொண்டு அவருக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதிலும் ஓபி ரவீந்திரநாத் குமார் முக்கிய பங்காற்றி வருகிறார்.

உயர் நீதிமன்ற வழக்கு
இந்த நிலையில் தான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியாகி இருக்கிறது. தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு," தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் குமார், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவரது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

மனு தள்ளுபடி
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தொகுதி வாக்காளர் என்ற அடிப்படையில் மிலானி என்பவர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல. மேலும் தேர்தல் வழக்குத் தொடர்வதற்கான உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால் ரவீந்தரநாத் குமாரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றம் அதிரடி
இதனை தொடர்ந்து மிலானி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஏற்கனவே ரவீந்திரநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தனது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரும் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய ஓ.பி.ரவீந்திரநாத் மனு தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கில் தலையிட விரும்பவில்லை என்ற நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக