செவ்வாய், 11 அக்டோபர், 2022

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக சுயநல சூழலிய வியாபாரிகள்

 Gowtham Raj  :  பரந்தூர் விமானநிலையம் குறித்து சில கருத்துக்களை கூறலாம் என்று நினைக்கிறேன்.
உண்மையிலேயே இங்கிருக்கும் சூழலியல் வாதிகளுக்கு தமிழ்நாட்டில் இருக்கும்  விவசாயம் - பொருளாதாரம்- Demography (மக்கள்தொகையியல்) -நகரமயமாக்கல் பற்றி எல்லாம் ஒரு தொலைநோக்கு பார்வை இருக்கிறதா என்று தெரியவில்லை.
இவர்களின் வாதம் எல்லாம் half - bakedஆக தான் இருக்கிறது. அச்ச உணர்வை மிகைப்படுத்தி சொல்லும் போக்கு இவர்களிடம் நிரம்பி இருக்கிறது. உலக பிரச்னையை உள்ளூர் தீர்வுகள் மூலம் சரி செய்துவிடலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடப்பது 'Subsistence farming ' அதிலும் பெரும்பாலானவர்கள் இப்போது அதிலிருந்து Dairy farming & Mixed farming நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்தில் வசிப்பவர்களில் 35 % குடும்பங்கள் தான் விவசாயம் செய்கிறார்கள். (see first comment)
Agriculture to GSDP ratioவும் இங்கு 4% தான்.
 விவசாயம் தவிர்த்த ஒரு துணை தொழில் தான் இவர்களுக்கு வருவாய் ஈட்டி தரும் ஒன்றாக  இருக்கிறது. வானம் பார்த்த நிலங்களில் இது தான் யதார்த்தம் .


பரந்தூரில் இதே நிலை தான், ஏதோ அங்கு இருக்கும் விவசாயிகள் எல்லாம், விவசாயம் செய்து லட்சத்தில் வருவாய் ஈட்டுவது போல் சொல்கிறார் பூவுலகு சுந்தரராஜன்.
தமிழ்நாட்டு மக்கள் விவசாயம் அல்லாத தொழிலை தங்களது primary income sourceஆக அமைத்து நாள் பல ஆகிறது.
தமிழ்நாட்டில் நகரத்தில் வசிக்கும் மக்களின் சதவிகிதம் 2021 ஆண்டு எடுக்கப்படவேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியானால் 50% மேல் நிச்சயம் இருக்கும். 2011 census படி இங்குள்ள 48%(Urban Population).  இந்தியாவிலேயே அதிகம்.
பூவுலகு கூறுவது போல் இங்கு நடைபெற்ற நகரமயமாக்கல்  சென்னையை மட்டும் மையமாக கொண்டு இருக்கவில்லை. (இதை எல்லாம் ஒரு காரணமாக காட்டி, பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்கிறார்.)
நகரமயமாக்கல் தமிழ்நாட்டில் பரந்துப்பட்ட  ஒன்றாக தான் உள்ளது. பிற மாநில தலைநகர்களோடு ஒப்பிட்டால் இந்த உண்மை விளங்கும். மேலும் தமிழ்நாட்டின் போக்குவரத்து மற்றும் சாலை வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டால் இந்த பரவலாக்கப்பட்ட வளர்ச்சி பற்றி விளங்கிக்கொள்ளலாம்.
 4000 ஏக்கரில் ஒரு விமான நிலையம் அமைப்பதற்கு மாறாக 100 ஏக்கரில் 40 விமான நிலையங்களை அமைக்கலாம் என்று சொன்ன சூழியல் அறிவுஜீவிகள் இடையே தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை அறிய வெட்கமாக இருக்கிறது. (The Death of Expertise நூல் நினைவுக்கு வருகிறது.)
சாலைகள் - வேண்டாம்,
விமான நிலையம் - வேண்டாம்,
அனல் மின் நிலையம் - வேண்டாம்,
அணு மின் நிலையம் - வேண்டாம்,
உரமிட்ட அரிசி - வேண்டாம்,
செங்கல் சிமெண்ட் வைத்து கட்டப்படும் வீடு - வேண்டாம்
PPP மாடல் - வேண்டாம்
சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தள்ளி எதற்காக விமான நிலையம் அமைக்கிறீர்கள்?  என்று கேட்டுவிட்டு, இங்கிருக்கும் விமான நிலையத்தையே விரிவுபடுத்தலாமே என்கிறார். அதற்கு ஏதோ Golf court காரணங்கள் எல்லாம் சொல்கிறார்.
நகரத்தில் இருக்கும் விமான நிலையங்கள் குறிப்பாக சென்னை விமான நிலையம் - அதிகளவிலான போக்குவரத்து நெரிசலை கூடியுள்ளது. ஆலந்தூரில் இருந்து தாம்பரம் சென்று வருபவர்களுக்கு இந்த சிக்கல் புரியும். மேலும் இங்கு இருக்கும் விமான நிலையத்தை விரிவாக்குவது, Air Traffic ஐ கூடி விபத்துக்கான சாத்தியங்களையும் அதிகரிக்கும். (ஒருமுறை சூழியல் நண்பர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தபோது உணர்ச்சிவசப்பட்ட அவர் “நகரத்தின் நடுவில் அணு மின் நிலையங்கள் அமைக்கலாமே என்றார்”.  நான் இப்போது சிரிப்பதா அழுவதா. )
மேலும் மக்களின் நிலத்தை கையகப்படுத்தும் போது கடைபிடிக்கவேண்டிய  சில பரிந்துரைகளை oct 7 அன்று வெளியான அருஞ்சொல் கட்டுரை தெளிவாக விவரிக்கிறது. அந்த கட்டுரை ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் தொலைநோக்கான ஒன்றாகவும் படுகிறது.பாலசுப்ரமணியம் முத்துசாமி அக்கட்டுரையை எழுதியுள்ளார். இந்த விவாதத்தில் ஆக்கபூர்வமான வகையில் வெளியான குறிப்பிடத்தகுந்த கட்டுரைஅது ஒன்று தான்.
அரைவேக்காட்டு தனமாக பூவுலகு இணைய பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதையும் இந்த கட்டுரையொடு சேர்த்துவைத்து படியுங்கள்.
software company வைத்து நடத்தும் ஒரு முதலாளியே முதலாளித்துவத்திற்கு எதிராக பேசுவதும். அதற்கு மார்ஸ், மார்க்சியம், போன்றவற்றை துணைக்கு அழைத்து கொள்வேதல்லாம், சமகால பேஷன். பாவம் அந்த தத்துவங்கள்.
பரந்தூர் விமான நிலையம் குறித்து நிதானமான விவாதத்திற்கு தமிழ் அறிவு சமூகம் தயாராக வேண்டும். தரவுகள் அடிப்படையில் அது அமைய வேண்டும். எல்லா காலத்திலும் வளர்ச்சி என்பது இப்படியான ஒன்றாக தான் இருந்துள்ளது. அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் எதை சாதிக்க போகிறார்கள் என்று தான் தெரியவில்லை .
அடுத்த 50 ஆண்டு, தமிழ்நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி எல்லாம், இது போன்ற பச்சை அய்யோக்கியத்தனங்களுக்கு எந்த அளவுக்கு இடம்கொடுக்க போகிறோம் என்பதில் தான் அடங்கி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக