திங்கள், 10 அக்டோபர், 2022

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றதில் விதிமீறலா? அமைச்சர் விளக்கம்...

தினமணி : விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறப்படும் நிலையில், விதிமுறைப்படி குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டதா? என்று விளக்கம் கேட்கப்படும் என மத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தபோது நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பிறப்பு பற்றி கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றானரா? அதில் விதிமீறல் உள்ளதா? என விளக்கம் கேட்கப்படும் என பதிலளித்தார்.
வாடகைத் தாய் விவகாரத்தில் விதிமீறல் உள்ளதா என்று மருத்துவத் துறை சேவைகள் இயக்குநர் மூலம் விளக்கம் கேட்கப்படும் எனவும் குறிப்பிட்டார். வாடகைத் தாய் சட்டத்தின்படி, திருமணமான தம்பதி ஐந்து ஆண்டுகள் கழித்தே வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மனைவி 25-50 வயதுக்குள், கணவன் 26-55 வயதுக்குள் இருந்தால், அந்தத் தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற தகுதியானவர்கள் என்று சட்டம் கூறுகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக