திங்கள், 6 ஜூன், 2022

பயில்வான் ரங்கநாதனை எக்ஸ்போஸ் செய்த பாடகி சுசீத்திரா! "ரொம்ப எல்லை மீறி போறீங்க

நக்கீரன் செய்திப்பிரிவு  : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக அறியப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன்.
 ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை யூடியூப் தளத்தில் பகிர்ந்து வருகிறார்.
நடிகர்கள் பற்றிய இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி பலரும் புகார் கூறி வருகின்றனர். இதையடுத்து பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், பாடகி சுசித்ரா குறித்து தவறாக பேசியுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த பாடகி சுசித்ரா பயில்வான் ரங்கநாதனை போனில் தொடர்பு கொண்டு கடுமையாக சாடியுள்ளார்.
அதில், "உங்களுடைய லேட்டஸ்ட் வீடியோ பார்த்தேன். அதில் என்னை பைத்தியம், போதைக்கு அடிமை, யார் எது கேட்டாலும் பண்ணுவேன்னு சொல்லியிருக்கீங்களே? இதற்கு உங்ககிட்டே எதாவது ஆதாரம் இருக்கா?  உங்க வீட்டு பெண்களை பற்றி இப்படி பேசினா சும்மா இருப்பீங்களா?
பல பேர்கிட்ட பணம் வாங்கிக்கொண்டு இப்படி பேசுறீங்க.
யார்கிட்ட பணம் வாங்குறீங்களோ அவங்களோட லவுட் ஸ்பீக்கரா நீங்க ஆகுறீங்க. உங்களுக்கு நான் என்ன பண்ணேன். ஒரு பொண்ண இப்படி ஆபாசமாகவும், அசிங்கமாகவும் வாய் கூசாம ரொம்ப எல்லையை மீறி பேசுறீங்க" என்று கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பான ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

பிற்குறிப்பு   : சாத்தான் குளம் போலீஸ் நிலையத்தில் நடந்த சித்திரவதைகள் படுகொலைகளை உலக அளவில் வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததில் பாடகி சுசீந்திராவுக்கே பெரும் பங்கு உண்டு
அவர் மிகவும் துணிவாக தெளிவாக அங்கு நடந்த அட்டுழியங்களை அம்பலப்படுத்தினார்
இன்றுவரை கூட பாடகி சுசீத்திரா கூறிய பல உண்மைகளை பலரும் பேச தயங்குகிறார்கள்
பாடகி சுசீந்திராவுக்கு அந்த பெருமை இருக்கிறது  
பயில்வான் மாதிரி படுக்கை அறைக்குள் எட்டி பார்த்தவர் அல்ல பாடகி சுசீந்திரா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக