திங்கள், 6 ஜூன், 2022

வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு - முக்கிய குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு தீர்ப்பு

 

 மாலைமலர் : உத்தரப் பிரதேசம் வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு - முக்கிய குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. விசாரணையில் இந்த சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் காரணம் என தெரிய வந்தது. லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்தனர்.
100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வாரணாசியில் இந்துப் பல்கலைக்கழகம் அருகில் உள்ள அனுமன் கோவில், கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன.


இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-கஹர் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.
இதன்பின் காவல்துறை நடத்திய விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் வாரணாசி குண்டு வெடிப்புக்கு காரணம் என தெரிய வந்தது.
இந்நிலையில், வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதித்து காசியாபாத் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக