வெள்ளி, 10 ஜூன், 2022

யாழ் நல்லூர் கந்தசாமி கோயில் பொதுமக்களுக்கு உரிய தரும சொத்து என யாழ் நீதிமன்றம் august 17 ஆம் தேதி 1928 இல் தீர்ப்பு அளித்ததுள்ளது

 1928 ஆம் ஆண்டு யாழ்ப்பாண த்தில் இருந்து வெளிவந்த திராவிடன் பத்திரிகையில்   நல்லூர் கோயில் தொடர்பான ஒரு முக்கிய வழக்கு இடம்பெற்றிருக்கிறது
17 ஆகஸ்ட் 1928 இல் வெளிவந்த "திராவிடன்" பத்திரிகை  செய்தி:  
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு!  :
நல்லூர் கந்தசாமி கோயிலை தரும சொத்து என்று நிர்ணயிக்க வேண்டும் என்று ராமநாதன் கோலிச்சில் (காலேஜ் - கல்லூரி) தலைமை உபாத்தியாயராக இருக்கும் ஸ்ரீ சி கே சுவாமிநாதன் அவர்களும் இன்னும் ஆறுபேரும் ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியாரும் அவரது தாயார் ஆகிய  இருவர் மீதும் தொடர்ந்த வழக்கு யாழ்ப்பாணம் பெரிய நீதிஸ்தலத்தில் விசாரணை செய்யப்பட்டது.
முன்பு கோயில் அர்ச்சகராக  இருந்து வேலையை விட்டு போய் கோயில் நிலத்திற்கு வழக்கு தொடர்ந்திருக்கும் பிராமணர்களும் இவ்வழக்கில் சாட்சிகளாக சேர்த்து கொள்ளப்பட்டனர்.

முதலாம் பிரதிவாதியான ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியார் சாட்சியம் கூறுகையில்,
தாம் கந்தசாமி கோயிலை கட்டிய டான் சுவான் மாப்பாண முதலியாரின் வம்சத்தவர் உணவு தாம் அந்த கோயிலுக்கு சொந்தக்காரர் எனவும் ,

பொதுசனங்கள் கோயிலின் நிர்வாகத்தில் தலையிட பாத்தியமில்லை என்றும் தமது குடும்பத்தினருக்கே கோயில் சொந்தம் என்றும் கூறினார் .

 மேற்படி வழக்கு சென்ற மாதம் 23 ஆம் தேதி தீர்ப்பு செய்யப்பட்டது
 கோயில் பொதுவாக உரிய தரும சொத்தென்றும்,
மற்ற விஷயங்கள் பின்னர் விளங்கப்படும் என்றும் செலவு மாத்திரம் வழக்காளிகளுக்கு எதிராளிகள் கொடுக்கும் படி தீர்வை இடப்பட்டது


 


 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக