வெள்ளி, 10 ஜூன், 2022

ஆடு மேய்க்க சென்ற பெண் கொடூரமாக பலாத்காரம்.. வாளால் வெட்டி கொலை . கிருஷ்ணகிரியில்

tamil.asianetnews.com  - வினோத் குமார் : மாலை நேரம் ஆனதால் ஆடுகளை ஒன்றாக சேர்த்து மீண்டும் வீட்டிற்கு அழைத்துச்செல்லும் பணியில் லட்சுமியும் துரையும் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது துரையின் ஆடுகள் அங்கிருந்து தூரமாக மேய்ச்சலுக்கு சென்றிருந்ததால், அந்த ஆடுகளை அழைத்து வருவதற்காக அவர் சென்றிருந்தார். அப்போது 35 வயது மதிக்கதக்க வாலிபர், தனியாக இருந்த லட்சுமியிடம் திடீரென சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கனகமுட்டுலு அருகே தண்ணீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ராதா. கூலி தொழிலாளி. இவரின் மனைவி லட்சுமி (40). இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ராதா, கூலி வேலைக்கு சென்ற பின், லட்சுமி ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச்செல்வார். இவருடன் இதேபகுதியை சேர்ந்தவர் துரை (50) என்பவரும் செல்வது வழக்கம்.



இந்நிலையில் வழக்கம்போல் லட்சுமி ஆடுகளை மேய்ப்பதற்காக நேற்று காலை சென்றார். அவருடன் துரையும்தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்றார். ஜி.டி. மலை பகுதியில் இருவரும் ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். அப்போது அங்கு 35வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். தான் கிழங்குகளை எடுத்து செல்வதற்காக வந்ததாக அந்த வாலிபர் கூறினர். பின்னர் லட்சுமி, துரை ஆகியோரி டம் பேசிக்கொண்டிருந்த அந்த வாலிபர் அவர்களுடனே இருந்துவிட்டார். துரை, லட்சுமி ஆகியோர் சாப்பிட்டபோது அந்த வாலிபருக்கும் அவர்கள் சாப்பாடு கொடுத்தனர்.

இதையடுத்து மாலை நேரம் ஆனதால் ஆடுகளை ஒன்றாக சேர்த்து மீண்டும் வீட்டிற்கு அழைத்துச்செல்லும் பணியில் லட்சுமியும் துரையும் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது துரையின் ஆடுகள் அங்கிருந்து தூரமாக மேய்ச்சலுக்கு சென்றிருந்ததால், அந்த ஆடுகளை அழைத்து வருவதற்காக அவர் சென்றிருந்தார். அப்போது 35 வயது மதிக்கதக்க வாலிபர், தனியாக இருந்த லட்சுமியிடம் திடீரென சில்மிஷத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி சத்தம் போட்டுள்ளார்.

Women Rape and murder.. youth absconding in krishnagiri

ஆனால் அந்த வாலிபர், லட்சுமியை பலாத்காரம் செய்து விட்டு கொடுவாளால் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினார். இதனிடையே சத்தம் கேட்டு துரை ஓடி வந்து பார்த்தபோது லட்சுமி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். பின்னர் இது குறித்து கந்திக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லட்சமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பர்கூர் நக்கல்பட்டியை சேர்ந்த புல்லட் என்கிற சிம்மராஜ்(35) என்பவர் லட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள சிம்மராஜை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக