வெள்ளி, 10 ஜூன், 2022

பிபிசி நிருபரிடம் எகிறி பாய்ந்த கோவை ஈஷா ஜாக்கி

May be an image of 1 person and text

குமரேசன் சி செ  : நிரூபர் : சுற்றுச்சூழல் சார்ந்து அக்கறையோடு செயல்படக்கூடிய ஈஷா அறக்கட்டளை மீது அதேநேரத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றனவே. அதுபற்றிய உங்கள் கருத்து.
ஜக்கி :எவ்வளவு தடவை இதையே கேட்பீர்கள்?
நிரூபர் :சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் தான்...
ஜக்கி:
உங்களுக்கு யார் சொன்னார்கள். நீங்கள் செய்தி பார்க்கிறீர்களா அல்லது அரசு துறைகள் சொல்வதைப் பார்க்கிறீர்களா, நீதிமன்றம் சொல்வதைப் பார்க்கிறீர்களா, இல்லை உங்கள் பக்கத்து வீட்டில் பாதி மூளையோடு இருக்கும் யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்கிறீர்களா?
என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். நாங்கள் எந்தவொரு ஆக்கிரமிப்பும் செய்யவில்லை, அனைத்துமே சரியாக உள்ளதாக அரசு துறைகள் சொல்கின்றன.


நிரூபர் :
சுற்றுச்சூழல் குறித்த அக்கறையுள்ளவர்கள், கட்டுமானத்தை மேற்கொள்வதற்கு முன்பே வாங்கியிருக்க வேண்டிய சுற்றுச்சூழல் அனுமதியை, கட்டிய பிறகு வாங்க ஏன் முயல வேண்டும்? முன்பே வாங்கியிருக்கலாமே?
ஜக்கி:
நாட்டில் அரசாங்கம் உள்ளதா? சட்டம் உள்ளதா? அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும், நீங்கள் ஏன் செய்கிறீர்கள்.
இத்துடன் போதும். நிறுத்திக் கொள்ளலாம்.
நிரூபர்:
ஈஷாவுடைய கடிதத்திலேயே "சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் விதிகளை மீறிவிட்டோம்" என்று குறிப்பிட்டு, அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய உங்கள் கருத்து?
(இந்தத் தருணத்தில், பிபிசியின் கேமராவை ஆஃப் செய்யுமாறு ஜக்கி வாசுதேவ் தனது தன்னார்வலர்களிடம் அறிவுறுத்தினார். பிபிசியின் 3 கேமராக்களையும் அவர்களே கட்டாயமாக ஆஃப் செய்துவிட்டார்கள்.)
தட்டச்சு :yarl.com
#செத்தகுரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக