ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு நகரும் IT நிறுவனங்கள்- மத தீவிரவாதம் ..அதிர்ச்சியில் பாஜக!

“மத பிரச்னையால் பதற்றம்”: கூடாரத்தை காலிசெய்து தமிழ்நாட்டுக்கு நகரும் IT நிறுவனங்கள்- அதிர்ச்சியில் பாஜக!

கலைஞர் செய்திகளை : கர்நாடகாவில் வகுப்புவாதம் காரணமாக அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் சமீபகாலமாக மத ரீதியான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. ஹிஜாப் பிரச்சினை கடுமையாக வெடித்து இன்னும் ஓயாத நிலையில் இந்து கோவில்களுக்கு அருகே இஸ்லாமியர்கள் கடை நடத்த தடை விதிக்கப்பட்டது.


அதைத்தொடர்ந்து, பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி வைத்து பாங்கு ஓதுவதை கண்டித்தும் ஸ்ரீராம் சேனா அமைப்பு பிரச்சினை கிளப்பியது. அடுத்தடுத்து மத ரீதியில், வைத்து நடந்து வரும் செயல்கள் கர்நாடக மக்களிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் வகுப்புவாதம் காரணமாக அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அதிருப்தியடைந்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூரில் இயங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனமான பயோகானின் தலைவர் கிரண் மஜும்தர் ஷா, கர்நாடக மாநில பா.ஜ.க அரசை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நாம் வகுப்புவாத செயல்களை அனுமதிக்கக்கூடாது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்ப துறைகளில், வகுப்புவாதம் ஆக்கிரமித்தால், அது உலகளாவிய நம் தலைமையை அழித்துவிடும்.

எனவே வளர்ந்து வரும் மதம் சார்ந்த பிளவுக்கு தீர்வு காண முதல்வர் பசவராஜ் பொம்மை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். அவரது கருத்தை ஏற்காத பா.ஜ.கவினர் அவரை விமர்சித்து வருகின்றனர்.\\

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு பெரும் வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
“மத பிரச்னையால் பதற்றம்”: கூடாரத்தை காலிசெய்து தமிழ்நாட்டுக்கு நகரும் IT நிறுவனங்கள்- அதிர்ச்சியில் பாஜக!

ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் புள்ளி விபரங்களின்படி, இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 4 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 16 சதவீதம் ஆக ரூ.3,19,976 கோடி வீழ்ச்சியடைந்த போதும் தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதன் மூலம் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதில் முன்னோடி மாநிலமாக மாறி வருவது தெரியவந்துள்ளது.

சமீபத்தில், கர்நாடக மாநிலத்தின் சட்ட மேலவையில் பேசிய அரசு கொறடா பிரகாஷ் கே ரத்தோட், கர்நாடகத்தில் முதலில் முதலீடு செய்ய திட்டமிட்ட பல்வேறு நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் இல்லை என்பதால் தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாக வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக