ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

கனடாவில் உத்தர பிரதேச மாணவர் சுட்டு கொலை .. டொரோன்டோ நகரில்

 நக்கீரன் : இந்திய மாணவர் ஒருவர் கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர் கனடா நாட்டின் டொரோண்டோவில் முதலாமாண்டு மேலாண்மை படிப்பை படித்து வந்துள்ளார்.
 கடந்த ஜனவரி மாதம் தான் இவர் கனடாவுக்கு படிக்க சென்றுள்ளார். அங்கு ஒரு உணவகத்தில் பகுதி நேர ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், சுரங்க ரயில் நிலைய பகுதியில் சென்றுகொண்டிருந்த இவரை, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.


 அவரது உடலை எடுத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கனடாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை என்றும் கனடா பாதுகாப்பான நாடு என தனது மகன் எப்போதும் கூறிவந்ததாகவும், மாணவரின் தந்தை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக