ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

ஒரு மொழி அழிந்தால் கூடவே செல்பவை.. திரைப்படங்கள் .. பாடல்கள் நூல்கள் .. இன்னும் இன்னும்

May be an image of text

கால்களின் சிலம்பு = சிலப்பதிகாரம்.
இடையில் மேகலை = மணிமேகலை
கைகளில் வளை = வளையாபதி
மூக்குத்தி & சுருள்முடி = குண்டலகேசி
மணிமாலை = சீவகசிந்தாமணி

ராதா மனோகர் : மொழியாபிமானம் என்பது வெறும் அலங்கார பெறுமதி மட்டுமே உள்ள ஒரு விடயம் அல்ல.
ஒரு மொழி என்பது வரலாற்று சான்றுகள் நிரம்பிய ஒரு அகழாய்வுக்கு உரிய நிலம் போன்றது
மொழி உணர்வை புறந்தள்ளியதால் இந்திய உப கண்டத்தில் எத்தனை மொழிகள் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன என்பது வெறுமனே உசுப்பேத்தும் மேடை பேச்சு விவகாரமல்ல.
அது ஒரு பொருளாதார வாழ்வியல் வீழ்ச்சியும் கூட என்பது பற்றி பலருக்கும் போதிய புரிதல் இல்லையென்றே கருதுகிறேன்
இந்திய திரையுலகம் உட்பட இதற்கான வலுவான சான்றுகள் புள்ளிவிபரங்கள் உள்ளன.


ராஜஸ்தான் மாநிலம் தங்கள் ராஜஸ்தானிய மொழியை  இழந்ததால் வெறுமனே ஒரு மொழியை மட்டும் இழக்கவில்லை
அவர்கள் இழந்தது அவர்களின் எண்டெர்டெயின்மென்ட் இண்டஸ்ட்ரியையும் தான் இழந்துவிட்டார்கள்
அவர்களின் புத்தங்கள் பத்திரிகைகள் திரைப்படங்கள் பாடல்கள் இன்னும் எத்தனையோ ஊடக வாய்ப்புக்களையும் இழந்துவிட்டார்கள்   
ராஜஸ்தானியர்கள் இழந்ததை எல்லாம் இந்திக்காரர்கள் கைப்பற்றி விட்டார்கள் .. வெறுமனே திரைப்படங்களை மட்டுமல்ல
பொருளாதாரமே பெரிது என்றால் மொழி சார்ந்த பொருளாதாரத்தையும் கூட இழந்துவிட்டார்களே?
மகாராஷ்டிரா போஜ்பூரி மைதிலி ஹரியான்வி ஒடிஷா குஜராத்தி பஞ்சாபி இன்னும் சரியாக சொல்லப்போனால் ஆமானப்பட்ட  வங்காள சினிமாவே வேகவேகமாக காணாமல் போகிறதே?
இங்கே எல்லாம் காணாமல் போனது வெறும் மொழிகள் மாத்திரம் அல்ல
கூடவே மொழி சார்ந்த வேலைவாய்ப்புக்களை பொருளாதாரங்களும் கூடவே ஓடிப்போயின.
இந்திய அளவில் ஆயிரக்கணக்காக கோடி ரூபாய்களும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்களும்
இந்தி ஆதிக்கத்தோடு போட்டி போட்டுகொண்டு இன்னும் உயிர்துடிப்போடு இருப்பது தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகம் கேரளா போன்ற மாநில மொழி திரைப்பட தொழில்கள் மட்டுமே
இதற்கு மிக அறுதியான ஒரே ஒரு காரணம் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு போர்க்கொடி தூக்கிய வரலாறு மட்டுமே
தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் ஏனைய மாநிலங்களின் ஆங்கில கல்வியும் கூட இன்றுவரை தாக்குப்பிடிப்பது  தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போரால் மட்டுமே
தமிழ் என்றாலே ஒரு வித காய்ச்சலோடு இன்னும் எத்தனை நாள்தான் பேசிக்கொண்டிருக்க போகிறீர்கள்?
இன்று இந்திய பன்முக தன்மையின் ஒரே ஒரு அத்திவாரம் கூட தமிழ்நாடு உருவாக்கிய மாநில மொழி உணர்வுதான்
அதற்கு மூல கரணம் தமிழ்நாடு முன்னெடுத்த திராவிட கோட்பாடுதான்        

George RC  :  ரஹ்மானின்  அறிவிப்பு குறித்தான பெருமைகள், ஆய்வுகள், அதன் அரசியல்
எல்லாம் கிடக்கட்டும்.
மொழியை தாய் என்றோ மூத்த மொழி என்று முஷ்டியை உயர்த்தியோ கொண்டாடும் மற்ற இனங்கள்
எதுவும் என் நினைவுக்கு உடனடியாக வரவில்லை.  
தமிழைப் பழித்தவனை
தாய் தடுத்தாலும் விட மாட்டேன் என்று
உயிர் குடிக்க புறப்படும் முன்னால்...
மொழியை சரியான முறையில்
கற்பதும் பயன்படுத்துவதும் தான்
அதன் வளர்ச்சிக்கும் நீட்சிக்குமானவை.
பெருங் கவிஞர்களுக்கே
புணர்ச்சி விகாரம் புரிவதில்லை.
ஒருவேளை புணர்ச்சியே
விகாரமாய் மனதில் நிறைந்து இருத்தலால் ஆக
இருக்கக் கூடும்.
விகடனும் விஜய் டிவியும் பயன்படுத்தும்
தமிழும் ஆங்கிலமும் இல்லாத
ஏதோ ஒன்று தான்
இன்றைய தமிழ் என்றால்...
இந்த
இ 'ழ' வை வைத்து கொண்டு
எதையும் புடுங்க முடியாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக