வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

கண்ணீர் விட்ட ரஜினி: கோபத்தில் கத்திய தனுஷ், அதிர்ந்த ஐஸ்வர்யா

ரஜினி மீது நம்பிக்கையில்லை | Dinamalar Tamil News

Shameena Parveen  -  Samayam Tamil :    மூத்த மகளின் வாழ்க்கையை நினைத்து ரஜினிகாந்த் கண்ணீர்விட்டாராம்.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். பிரிவை அறிவித்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்கள்.
தனுஷையும், ஐஸ்வர்யாவையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார் ரஜினி. ஐஸ்வர்யாவின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்கிற வேதனையில் ரஜினி அழுதுவிட்டாராம்.
இது தவறான முடிவு, 2 மகன்களை நினைத்து மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ் என்று கூறியும் ஐஸ்வர்யா கேட்கவில்லையாம். இதற்கிடையே ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக இருக்கிறாராம் தனுஷ்.

உங்க இரண்டு பேர் சந்தோஷத்தை மட்டும் பார்க்கிறீர்களே, மகன்களை பற்றி ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறீர்கள் என ரஜினி வேதனைப்படுகிறாராம்.

ரஜினியின் நிலையை பார்த்து அவரின் நண்பர்கள் கவலையில் உள்ளனர். தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் கஸ்தூரி ராஜாவும் ஈடுபட்டுள்ளாராம்.

அவர் ஐஸ்வர்யாவுடன் பேசி ஒரு திட்டம் போட, அது குறித்து அறிந்த தனுஷோ, ஏம்பா தேவையில்லாத வேலை பார்க்கிறீர்கள். இனிமேலும் என்னால் முடியாதுப்பா, என்னை விட்டுடுங்க என்று கோபமாக கூறினாராம். அதை கேட்டு ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்தாராம்.

குடும்ப பிரச்சனையை மறக்க படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். வேலைக்காக ஹைதராபாத் சென்ற ஐஸ்வர்யாவோ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக