வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

நீட் விலக்கு விவகாரம் - ஆளுநர் மாளிகையை முற்றுகையிட தயாராகும் கட்சியினர்+ கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு!

 நக்கீரன்  :நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்பினரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக அரசு இதுதொடர்பான விரிவான விளக்கத்தைத் தெரிவித்துள்ளது.
ஆளுநரின் முடிவைக் கடுமையாக எதிர்ப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில்,
குறிப்பிட்ட சில அரசியல் கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று அறிவித்துள்ளனர். நேற்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து ஆளுநர் மாளிகையை நோக்கிச் செல்ல முயன்றனர்.


அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
அப்போது நீட் விலக்கிற்கு எதிரான மசோதாவை நிரகாரித்த ஆளுநரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகளும் இன்று இதே மாதிரியான போராட்டத்தை முன்னெடுக்க வாய்ப்புள்ளதால் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் நிராகரித்ததை கண்டித்து ஆளுநர் மாளிகையை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது நீட் விலக்கு எதிரான மசோதாவை நிரகாரித்த ஆளுநரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து ஆளுநர் மாளிகையை பல்வேறு அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் 50 க்கும் அதிகமான காவலர்கள் ஆளுநர் மாளிகையை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக